Published : 13 Oct 2022 06:38 AM
Last Updated : 13 Oct 2022 06:38 AM
கு.பொன்மணிச்செல்வன்;
செந்தமிழ் பதிப்பகம், தொலைபேசி: 044-26502086.
`நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து எண்ணற்ற அடியார்கள் அருளாளர்களாக இந்தப் புவியில் உயர்ந்திருக்கின்றனர். ஆனால் சிவனின் அருளாலேயே, `காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்னும் ஐந்து வார்த்தையில் “இந்த உலகத்திலிருந்து நீங்கும்போது, நீ கொண்டு போவப்போவது ஒன்றுமில்லை” என்னும் தத்துவத்தைப் புரிந்துகொண்டு துறவு வாழ்க்கையை நாடிய பெரும் வணிகர் திருவெண்காடர். அவர் பட்டினத்தாரான கதையையும் அவரின் தியான வழிகள், அவருடைய வாழ்வில் நடந்த பல அரிய நிகழ்வுகள், அவர் எழுதிய பாடல்கள், அந்தப் பாடல்களின் தாக்கம் இலக்கிய உலகிலும் வெகுதக்கள் கலை வடிவங்களிலும் பரவியிருக்கும் விதம் விரிவாக இந்தப் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.
படிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்
நாகர்கோவில் கிருஷ்ணன்;
நர்மதா பதிப்பகம்;
தொலைபேசி: 044-24334397.
திருமால் பெருமைக்கு நிகரேது! காக்கும் கடவுளின் அருளையும் ஏழுமலைகளின் அதிபதியாகத் திகழும் வேங்கடமுடையானின் மகாத்மியங்களையும் ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம், பிரம்மாண்ட புராணம், வாமன புராணம், மார்க்கண்டேய புராணம் போன்ற அரிய நூல்களின் துணை கொண்டு கர்மசிரத்தையோடு எழுதப்பட்டிருக்கும் நூல் இது. ஏழுமலை வாசனான வேங்கடவனுக்கு இருக்கும் பெருமைகளையும் மகிமைகளையும் போன்று அந்த ஏழு மலைகளுக்கும் இருக்கும் பெருமைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. திருப்பதிக்குச் செல்பவர்கள் அலர்மேல் மங்கைத் தாயாரை அவசியம் தரிசிக்க வேண்டும். அலர்மேல் மங்கைத் தாயாரின் மகத்துவமும் இந்த நூலில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT