Published : 14 Jul 2022 10:31 AM
Last Updated : 14 Jul 2022 10:31 AM

ப்ரீமியம்
ஸ்ரீ. உ.வே. திருப்புட்குழி நரஸிம்ம தாதயார்ய மஹாதேசிகன் நூற்றாண்டு விழா

ஸ்ரீ உ.வே. திருப்புட்குழி நரஸிம்ம தாதயார்ய மஹா தேசிகனின் நூற்றாண்டு விழா சென்னை தரமணியில் ஸ்ரீ ஹயக்ரீவ வித்யாபீடத்தின் சார்பாக மூன்று நாட்கள் விமரிசையாக நிகழ்ந்து, ஆனி அச்வினியன்று (24-6-22) முடிவடைந்தது.

இதன் அங்கமாக ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், ஜைமினீய சாகை, அதர்வண வேதம், ஆகியவற்றை வேத விற்பன்னர்கள் பாராயணம் செய்தனர். அத்துடன், ‘க்ரந்த சதுஷ்டயம்’ என்று போற்றப்படும் நாலு நூல்கள் ஆகிய பாஷ்யம், பகவத்கீதா பாஷ்யம், பகவத் விஷயம், ரஹஸ்யத்ரயஸாரம் என்ற க்ரந்தங்கள் முழுதாகப் பாராயணம் பண்ணப்பட்டன. இன்னொரு குழுவினர் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதலியவற்றைப் பாராயணம் செய்தனர். மொத்தத்தில் ஏராளமான வித்வான்கள் பங்கேற்றதால், அந்த வளாகமே தெய்விக ஒலி சூழ்ந்து திகழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x