Published : 23 Dec 2021 11:11 AM
Last Updated : 23 Dec 2021 11:11 AM
இந்த மகாலட்சுமி சிற்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆலயத்தின் நுழைவாயிலில், ஆலய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள தூண் ஒன்றில் அரை அடி உயரத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உள்ளது. பத்மாசனத்தில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறார். கைகளில் தாமரை மொட்டு போன்ற வடிவமுள்ளது.
பத்மாசனத்தில் தாமரை மலரின் மீது கம்பிரமாக அமர்ந்துள்ள ஸ்ரீ லட்சுமி தேவியின் பின்புறம் நன்கு மலர்ந்த தாமரை மலரைப் போன்ற அழகான அமைப்பு உள்ளது. அன்னையைச் சுற்றிலும், ஆடைகளிலும் மற்றும் அமர்ந்து இருக்கும் ஆசனத்திலும் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது சிற்பியின் கற்பனைத் திறனை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
காதுகளில் நவரத்தின குண்டலங்களும், தலையில் கிரீடமும், கழுத்திலும்,தோள்களிலும் சாதாரணமான அணிமணிகளுமாக இருப்பதும் அழகு. இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தினை பெரியாழ்வார் கட்டினார் என்று கர்ணபரம்பரை செய்தி உள்ளது. ராணி மல்லி என்பவரின் மகன் வில்லிக்காட்டை திருத்தி அமைத்ததால் வில்லிபுத்தூர் எனவும், ஆண்டாள் அவதரித்ததால் திருவுடைய ஊரச்ர்ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆக ஆனது. இந்தச் சிற்பம் முற்காலச் சோழர்கள் காலத்தை சேர்ந்தது என வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT