Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM
மலையை அடக்கியவர்; கடலைக் குடித்தவர்; நதியைக் கமண்டலத்தில் அடக்கியவர்; இறைவனின் திருமணத்தின்போது வடக்குப் பகுதி தாழ்ந்து தெற்குப் பகுதி உயர்ந்தபோது தெற்கே சென்று சமன் செய்தவர்; கும்பமுனி, குறுமுனி என்று அன்போடு அழைக்கப்படுபவர்; சொல்லுக்கு அகத்தியர் என்று போற்றப்படுபவர்.
குட்டையான உருவத்தோடு பெருத்த தொந்தியும் நீண்ட ஜடாமுடியுடனும் நீண்ட தாடியுமாக வலது கரத்தில் சின்முத்திரையுடன் உபதேசிக்கும் பாங்கில் கையில் கமண்டலத்துடன் காட்சிதரும் இடம் இது. அணிந்திருக்கும் ஆடையின் மெல்லிய கோடுகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் அற்புதமான பாவம் வெளிப்பபடுகிறது.
அவரின் இருபுறமும் சீடர்கள் காணப்படுகின்றனர். இவர் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட தில்லைக் கூத்தன் ஆலயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்குக் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழையும்போது, சுப்பிரமணிய சுவாமி சந்நிதியின் வடக்குப் பகுதியில் தரிசனம் தருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT