Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
பால கணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்ன கணபதி, க்ஷிப்ர கணபதி, ஏரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, மஹா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாக்ஷ்ர கணபதி, க்ஷிப்ர பிரசாத கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி, துர்கா கணபதி, சங்கட ஹர கணபதி என முப்பத்தி இரண்டு வகையான விநாயகர்கள் உள்ளனர்.
இவர்களில் இவர் பதினோராவது கணபதியான ஏரம்ப கணபதி ஆவார். இவருக்கு தலைமேல் ஒன்றும், இரண்டு காதுகளின் இரு புறமும், பின்புறம் ஒன்றுமாக மொத்தம் ஐந்து முகங்கள் உள்ளன. இவரது வாகனம் சிம்மம் ஆகும். இவரது பத்து திருக்கரங்களிலும் அபயஹஸ்தம், வரஹஸ்தம், பாசம் அங்குசம், சம்மட்டி பரசு, அட்ச மாலை பூச்செண்டு, தந்தம், மோதகம் எனப் பல ஆயுதங்களையும் தாங்கியுள்ளார். நல்ல தேகக்கட்டுடன், கம்பீரமாக வலதுகாலைத் தொங்க விட்டபடியும், இடதுகாலை மடித்தபடி தாமரைப் பூவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
ஐந்து திருமுகங்கள் ஞானசக்தியைக் குறிப்பது. தலைக்கிரீடம், கழுத்திலும், இடையிலும் காணப்படும் வித்தியாசமான அணிமணிகள், ஆபரணங்கள் அனைத்தும் அழகுடன் பொலிகின்றன.
இவர் நாகத்தை முப்புரி நூலாகத் தரித்துள்ளது வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்பு. இவர், கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயிலான, பஞ்ச பூதத் தலங்களில் நீரை குறிக்கும் அப்பு தலமான திருஆனைக்காவில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதியின் பின்புறம் தென் மேற்கு மூலையில் காணப்படுகிறார்.
இவரைப் போன்ற பஞ்சமுக விநாயகர் திருவாரூரில் காணப்படுகிறார். அவரும் வலது காலை தொங்கவிட்டபடி, இடது காலை மடித்து வைத்தபடி அமர்ந்த நிலையில் உள்ளார். இவரது காலடியில் சிம்மம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT