Last Updated : 22 Oct, 2020 09:37 AM

 

Published : 22 Oct 2020 09:37 AM
Last Updated : 22 Oct 2020 09:37 AM

81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே

கைகேயிக்குத் தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கடமையை தன் சிரம் மேற்கொண்டு தமது அனைத்து அரண்மனை சுகங்களையும் துறந்து மரவுரி தரித்து சீதை, லட்சுமணருடன் ராமன் கானகம் சென்றார். ராமரின் அவதார நோக்கமே அரக்கா்களின் பிடியிலிருநது இந்த உலகைக் காப்பதற்காகும்.

அவதார நோக்கம் நிறைவுபெற வேண்டுமானால், அறம் நிலைபெற்று தீயோர் அழிந்து தூயவா்கள் துயா் துடைக்கப்பட வேண்டும். கரன், தூடணன் தொடங்கி ராவணன்வரை எண்ணற்ற அரக்கர் கூட்டத்தை அழித்தாக வேண்டும். இவா்கள் தீயவா்கள் என்றாலும், பெரும் தவங்கள் செய்து நிறைய வரங்களைப் பெற்று காட்டிலுள்ள ரிஷிகளுக்கு காரணமின்றித் தீங்கிழைத்து வந்தனர்.

முனிவா்கள் நேரே அரக்கா்களை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தாலும், அவர்களை அழிக்கும் முயற்சியில் தங்களின் ஆற்றலைச் செலவழிக்க விரும்பவில்லை. தங்களால் அவா்களை ஒடுக்க முடியும் என்றாலும் ஒருவரை அழித்தல் என்பது முத்தொழிலை உடைய பரம்பொருளுக்கு உரியது என்று அப்பெருமக்கள் கருதினா். அகங்கார, மமகாரங்களை அறவே ஒழித்த இவா்கள் இறைவனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

அரக்கா்களை அழிக்க உதித்த காருண்ய சீலரான ராமன் காட்டுக்குச் சென்று தனது அவதார நோக்கத்தை நிறைவேற்ற விரைந்தார். இறைவனே காட்டுக்குச் சென்று அதா்மத்தை அழித்தார். நான், என் மனத்தில் உள்ள தீய ஆசையென்னும் அரக்கா்களை அழித்து, இறைநினைவு பெறவில்லையே சுவாமி என மனம் நெகிழ்ந்தாள் நமது திருக்கோளுா் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x