Published : 07 Nov 2019 12:02 PM
Last Updated : 07 Nov 2019 12:02 PM
மூன்றாம் நந்திவர்மன் ஆட்சி காலத்தில் குடவோலை மூலம் பெருங்கரணை நாச்சியார் என்ற பெண்மணி அமர்ந்து நீதிவழங்கிய இடம் தெள்ளார் கிராமம்.
இங்கே எம்பெருமாள் ஆதிநாராயணப் பெருமாள் தனது தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பித்ருக்கள் சாபநிவர்த்தித் தலமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தில் நவம்பர் 15-ம் தேதி இரண்டாம் ஆண்டு திருபவித்ர உற்சவம் நடைபெறவுள்ளது.
பாலாற்றங்கரையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருமணத் தடை நீக்குபவர் என்ற நம்பிக்கை உள்ளது. கல்வி ஞானத்தைத் தரும் ஹயக்ரீவர் லக்ஷ்மி ஹயக்ரீவராக மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT