Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM
புத்த சமயத்தை ஒரே ஒரு சொல்லில் வருணிக்க வேண்டுமென்றால் ‘பற்றற்ற’ நிலை (Non attachment) என்பதாகத்தான் இருக்கும். புத்தரின் சுமார் எண்பத்து நாலாயிரம் பாடங்களும் இதனையே பேசுகின்றன. பற்றற்ற நிலையும் பிரிவு நிலை (Detachment), அல்லது தொடர்பற்ற நிலையும் முற்றிலும் வேறுபட்டவை.
- ஜென்
பாற்கடலின் பரிசு
பாரிஜாதம் இந்தியாவின் பவள மரம் என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஐந்து மரங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. அது இந்திரனின் சொர்க்கத்தில் வளர்ந் தது. வாசம் உலகங்களை நிறைத்தது.
- விஷ்ணு புராணம்
அனிலா
உடல் சாம்பலாகும்போது, மரணமூச்சு சென்றடையும் ’அழிவற்ற காற்று’. மரணத்தின் போது இவ்வுலகில் வாழும் மனிதனின் பல்வேறு பாகங்கள் பேரண்டத்தின் பாகங்களைச் சென்றடைகின்றன என்ற கருத்து சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
************
எதில் சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் வரை சந்தோஷமாக இருக்கவே முடியாது. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டேயிருக்கும் வரை நீங்கள் வாழவே போவதில்லை.
- ஆல்பெர் காம்யூ
சுருக்கமான வசந்தகாலத்து இரவில்
மிதந்த கனவுகளின் பாலம்
சீக்கிரமே உடைந்துபோகிறது
இப்போது
மலையின் உச்சியிலிருந்து
ஒரு மேகம்
திறந்த வானத்துக்குள் சென்று அடைகிறது.
- டோஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT