Published : 05 Sep 2019 10:58 AM
Last Updated : 05 Sep 2019 10:58 AM
மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பஞ்சமஸ்தான சஞ்சாரத்தால் எடுக்கும் காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு, எதிர்பார்த்த செல்வச் சேர்க்கை உண்டாகும். வீண் கவலை ஏற்படலாம். கலைத் துறையினருக்கு, கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை, மஞ்சள்.
எண்கள்: 2, 3, 9.
பரிகாரம்: மாரியம்மனைப் பூஜித்து வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறுகிறார். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு, நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் எந்தக் காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, தடைகளைத் தாண்டி கல்வியைக் கற்க செய்யும் முயற்சி வெற்றிபெறும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: அம்மனைத் தரிசித்து வர காரியத் தடை நீங்கும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். நல்ல திருப்பங்கள் ஏற்படும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும்.
பெண்களுக்கு, உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத் துறையினருக்கு, வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புதிய நபர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சலைக் குறைத்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: நவக்கிரஹத்தில் புதனை வணங்கி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சந்திரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பெண்களுக்கு, எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை தாமதம் நீங்கும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்துக்குச் சென்று வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் தனாதிபதி புதன் ஆட்சி உச்சமாக மாறுகிறார். பணவரத்து சீராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு, எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப் பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 2, 8.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளைப் பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் ஆட்சி உச்சமாக ராசிக்கு வருகிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சுபச்செலவுகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். இயந்திரம், நெருப்பு, ஆயுதம் பயன்படுத்துவோர் கவனமாக இருப்பது அவசியம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.
பெண்கள் மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. அரசியல்வாதிகளுக்கு, பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியைத் தவிரமற்றவைகளில் கவனத்தைச் சிதறவிடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 3, 5.
பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசையின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment