Last Updated : 02 Jan, 2025 05:28 AM

 

Published : 02 Jan 2025 05:28 AM
Last Updated : 02 Jan 2025 05:28 AM

அருப்புக்கோட்டையில் அருள்பாலிக்கும் ஆயிரங்கண் மாரியம்மன்!

நூற்றாண்டைக் கடந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது அருப்புக்கோட்டையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவாடித்தோப்பில் அமைந்துள்ளது ஆயிரங்கண் மாரியம்மன் கோயில்.

நூறாண்டுக்கு முன்பு எழுப்பப்பட்டது இக்கோயில். இக் கோயில் வடக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளதோடு, கோயிலின் பின்புறம் தெப்பமும் அமைந்துள்ளது. எனவே, இக்கோயில் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுவது உண்டு. கோயிலின் முன்புறம் பலி பீடம், கொடி மரம், சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.

அடுத்ததாக முக மண்டபம், மகா மண்டபமும், அதைத்தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளன. கருவறையில் மாரியம்மன் திரிசூலத்துடன் நின்றவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மனுக்கு இடப்புறம் விநாயகர் பீடம் ஒன்றும் உள்ளது. இங்கு உயிர் பலியிடுதல் வழக்கம் இல்லை. மாறாக இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிளக்கு பூஜை யும், மார்கழி தனுர் பூஜையும் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல தைப்பொங்கல், நவராத்திரி, சித்திரை பொங்கல் விழாக்களும், பங்குனி பொங்கல் விழாவும் வெகு சிறப்பாக கொண்டப்படுவது வழக்கம்.

மாதந்தோறும் கடைசி வெள்ளியில் குத்துவிளக்கு பூஜை, மார்கழி தனுர் பூஜை, தைப்பொங்கல், நவராத்திரி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சித்திரைப் பொங்கல் விழா 12 நாள்கள் கொண்டாடப்படும். கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும் மாலையில் கோயில் கலையரங்களில் சமயம் தொடர்பான நிழ்ச்சிகள் நடைபெறும். 8-ம் நாள் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறும். 10-ம் நாள் தேரோட்டமும், 11-ம் நாள் பூப்பல்லக்கும் நடைபெறும்.

பொங்கல் அன்று நள்ளிரவில் ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். புது ஆடை உடுத்தி, அலங்காரங்களுடன் ஆபரணங்களும் சாற்றப்பட்டு அம்மனை அலங்கரித்து, நைவேத்திய படையலும் இட்டு தூப தீபம் காட்டப்படும்.

திருவிழாக்களின் போது பக்தர்கள் விரதமிருந்து 25, 51, 101 அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பொம்மைகள் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவார்கள். ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதோடு, திருத்தேரோட்டமும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x