Published : 02 Jan 2025 06:32 AM
Last Updated : 02 Jan 2025 06:32 AM

ப்ரீமியம்
அனைத்​தி​லும் கண்ணன்

சிறுகூடல்​பட்டி முத்​தையா என்ற இயற்​பெயர் கொண்ட கவியரசு கண்ண​தாசன், கண்ணன் மீது அதிக ஈடுபாடு கொண்​ட​வர். கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்​ப​தில்லை, கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்​வ​தில்லை, கங்கைக் கரை தோட்​டம், கண்ணன் வந்தான் போன்ற பாடல்​கள், கண்ணன் மீது கண்ண​தாசன் கொண்ட ஈடுபாட்டை பறைசாற்றுகின்றன.

காதல், மனைவி, குழந்தை, குடும்​பம், சமுதா​யம், மகிழ்ச்சி, விரக்தி என அனைத்​தி​லும் கண்ணனை வைத்து கண்ண​தாசன் பாடியுள்​ளார் என்பதை ஓர் ஆராய்ச்சி கட்டுரை போல், சுவை குன்​றாமல் ஆசிரியர் தென்​காசி கணேசன் அளித்​துள்ளார். இத்துடன் பகவத் கீதை, மகாகவி பாரதி, வேத கருத்து​கள், ஆதிசங்​கரரின் ஸ்லோகங்​கள், திரு​மூலர், ஜகத்​குருக்கள் ஆகியோரின் உபதேச மொழிகள் ஆகிய​வற்றை கண்ண​தாசன் உள்வாங்கி எழுதிய பாடல்​களை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x