Published : 17 Oct 2024 06:20 AM
Last Updated : 17 Oct 2024 06:20 AM
சரணாகதி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ராமாயண மகாகாவியம் அமைந்துள்ளது. மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனே மனிதராக அவதரித்து வாழ்ந்து காட்டியுள்ளார். ராமபிரான் வேறு, தர்மம்வேறு என்று பிரிக்க முடியாத வகையில் அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்திருந்தது. விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் பரதன். எவ்வித தவறும் செய்யாமல் இருந்தபோதும், அனைவரிடம் இருந்தும் வீண் பழிச்சொல்லை பெற்றுக் கொண்டவர் பரதன்.
ராமபிரானுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறவில்லை. நடந்த சம்பவங்களை அறியாமல், அயோத்தி அரண்மனைக்குள் நுழையும் பரதனைப் பார்த்து, வசிஷ்ட முனிவர்,“இனி ராஜ்யம் உனக்குத்தான். உடனேபட்டாபிஷேகம் செய்துகொள்” என்கிறார்.ஏதும் புரியாத பரதன், “எனக்கு என்ன தகுதிஉள்ளது? இது தொடர்பாக எனக்கு ஏதும்தெரியாது” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT