Published : 05 Sep 2024 06:21 AM
Last Updated : 05 Sep 2024 06:21 AM
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி யின் மனத்தில் எழுந்திருக்கும் அறிவியல் ஆன்மிக சிந்தனை களின் நூல் வடிவம் இது. அறிவியல், தொல்லி
யல், வரலாறு, பண்பாட்டு விழுமி யங்களின் தோற்றுவாய் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டுவரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த மகான்கள், சித்தர்களின் ஆன்மிகப் பங்களிப்புகளையும் ஒருங்கே வழங்கும் கருவூலமாகத் திகழ்கிறது இந்நூல்.
"நிலம், நீர், தீ, வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்" என்கிறது நம்மிடையே உள்ள முதுநூல் தொல்காப்பியம். இந்தக் கோட்பாட்டைப்பிரதானமாகக் கொண்டும் அறிவியலின் துணை கொண்டும் ஆன்மிகத்தின் துண கொண்டும் ஏராளமான தகவல்களை இந்நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்துக்கும் சாரங்கபாணி பெருமாளுக்கும் உள்ள தொடர்பு, நம்மாழ்வார் ஏன் `குலபதி' எனக் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான விளக்கமும் இந்நூலில் உள்ளன.
"ஐந்தாவது பனிப்படர்வு ஊழியை அடுத்து தோன்றியுள்ள இடைவெளிக் காலத்திலேயே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்னும் வரிகளை, சுற்றுச்சூழலை மனிதன் கேள்விக்குள்ளாக்கினால், இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்னும் நூலாசிரியரின் எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT