Last Updated : 13 Jun, 2024 06:34 AM

 

Published : 13 Jun 2024 06:34 AM
Last Updated : 13 Jun 2024 06:34 AM

ப்ரீமியம்
புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் புள்ளபூதங்குடி வல்வில்ராமர் கோயில்

தஞ்சை மாவட்டம் புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ராமபிரான் சயன கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
வைணவ சம்பிரதாயத்தில் 2 பூதபுரிகள் உண்டு. பூத கணங்களுக்கு சாப விமோசனம் அருளிய இடம், பூதபுரி என்று அழைக்கப்படும். முதல் பூதபுரி – காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்புதூர் ஆகும். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தனர். இரண்டாவது பூதபுரியான புள்ளபூதங்குடியை ஆச்சாரியர்கள் சிறப்பித்தனர்.

ஒருசமயம் இத்தலத்துக்கு திருமங்கையாழ்வார் வந்திருந்தபோது, இத்தலத்தில் வேறு ஒரு தெய்வம் இருப்பதாக நினைத்து, பெருமாளை தரிசிக்காது செல்கிறார். அப்போது பெரிய ஒளி தோன்றியதைக் கண்ட திருமங்கையாழ்வார் வியந்தார். உடனே நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ராமபிரான் தோன்றி அருள்பாலித்தார். ராமபிரானை தரிசித்த மகிழ்ச்சியில், திருமங்கையாழ்வார், ‘அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே’ என்று 10 பாசுரங்கள் பாடி அருளினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x