Published : 13 May 2023 04:54 PM
Last Updated : 13 May 2023 04:54 PM
* சில ரீங்காரச் சிட்டுகளின் இதயம் நிமிடத்திற்கு சுமார் 1,000 முறை துடிக்கிறது.
* நீலத் திமிங்கிலத்தின் இதயம்தான் மிகப் பெரிய இதயம். சுமார் 180 கிலோ எடை கொண்டது. இதன் இதயம் ஒவ்வொரு 10 விநாடிக்கும் ஒருமுறை துடிக்கிறது.
* ஒரு சிறுத்தையின் இதயம் நிமிடத்திற்கு சுமார் 120 முறை துடிக்கிறது.
* ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்கள் உள்ளன.
* ஊர்வன விலங்குகளில் பலவற்றுக்கு மூன்று அறைகள் கொண்ட இதயங்கள் உள்ளன.
* மீன்களுக்கு இரண்டு அறைகள் கொண்ட இதயம் உள்ளது.
* யானைகளின் இதயம் நிமிடத்துக்கு 30 முறை துடிக்கிறது.
* எலிகளின் இதயம் நிமிடத்துக்கு 330 முதல் 480 வரை துடிக்கிறது.
* ஒரு சராசரி மனிதரின் இதயம் உள்ளங்கையை இறுக்கி மடக்கினால் எவ்வளவு இருக்குமோ அதே அளவாக இருக்கும். மனித இதயம் ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 100 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 1,15,000 முறை துடிக்கிறது. மனித இதயம் ஒவ்வொரு நாளும் சுமார் 7,570லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
* சிறிய உயிரினங்களின் இதயம் அதிக முறை துடிக்கின்றன. பெரிய உயிரினங்களின் இதயம் குறைவான முறை துடிக்கின்றன.
* சிறிய உயிரினங்கள் விரைவாக உடல் வெப்பத்தை இழக்கின்றன. அதனால் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க அதிக வெப்பத்தை வேகமாக உருவாக்க வேண்டும். எனவே, உடல் வெப்பத்தை மீண்டும் உருவாக்க, அவற்றின் இதயம் வேகமாகத் துடிக்க வேண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT