Last Updated : 20 Apr, 2023 05:28 PM

 

Published : 20 Apr 2023 05:28 PM
Last Updated : 20 Apr 2023 05:28 PM

ஆர்க்டிக் எனும் அதிசயம்!

  • பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கிறது ஆர்க்டிக்.
  • ஆர்க்டிக் பெருங்கடலைப் போலவே, ஆர்க்டிக் பகுதியும் ரஷ்யா, கிரீன்லாந்து, கனடா, அமெரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து ஆகியவற்றின் பகுதிகளால் ஆனது.
  • ஆர்க்டிக்கில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடினமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • 'ஆர்க்டிக்' என்ற பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 'கரடி' என்று பொருள்.
  • சமீப ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்க்டிக் பகுதி சுருங்கி வருகிறது.
பஃபின்
  • ஆர்க்டிக்கின் சற்று வெப்பமான பகுதிகளில் மூலிகைகள், பாசிகள், சிறிய புதர்கள் வளர்கின்றன.
  • துருவ நரி, அணில், வால்ரஸ், சீல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஆர்க்டிக்கில் வாழ்கின்றன.
  • நார்வால் எனப்படும் தந்தம் மூக்கு திமிங்கிலம் காணப்படுகிறது.
  • துருவக் கரடிகள் கரடி இனங்களில் மிகவும் பெரியது.
  • மிக பெரிய தந்தங்களுடைய கரிபு மான்களும் இங்கே காணப்படுகின்றன.
  • ஆலா, பஃபின், பனி ஆந்தை போன்ற பறவைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன.
நார்வால்
  • ஆர்க்டிக்கில் மீன், எண்ணெய், எரிவாயு, பல்வேறு கனிமங்கள் உள்பட பல இயற்கை வளங்கள் உள்ளன.
  • ஆர்க்டிக்கின் பனிக்கட்டியானது உலகின் நன்னீரில் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
  • ஆர்க்டிக்கில் உருவாகும் துருவ ஒளி கண்களைக் கவரும். இது இயற்கையாக உருவாகும் நிகழ்வு. வடதுருவத்தில் ஏற்படுவதால், வடதுருவ ஒளி (Aurora Borealis) என்று அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து வரும் துகள்களும் பூமியிலிருந்து கிளம்பும் காந்தப்புலமும் வேகமாகச் சேரும்போது துருவ ஒளி ஏற்படுகிறது.
  • பூமியின் சாய்வு காரணமாக ஆண்டுக்கு ஒரு நாள் முழு இருளிலும் ஒரு நாள் முழு சூரிய ஒளியிலும் இருக்கும்.

- ஆதன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x