Published : 20 Dec 2022 06:34 AM
Last Updated : 20 Dec 2022 06:34 AM
டிச.9: கடல் அலைகளிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆய்வுக் குழுவினர் உருவாக்கினர். இதற்கு ‘சிந்துஜா-1’ எனப் பெயரிட்டுள்ளனர்.
டிச.10: காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே விரைவில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
டிச.11: இமாச்சலப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுக்விந்தர் சிங் சுக்ஹூவுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டிச.12: குஜராத் முதல்வராக பாஜகவின் பூபேந்திர பட்டேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பூபேந்திர பட்டேல் இரண்டாவது முறை முதல்வராகியிருக்கிறார்.
டிச.13, 14, 19: கத்தார் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா குரேஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையைக் கைப்பற்றியது.
டிச.14: தமிழக அமைச்சரவை முதன் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். 10 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.
டிச.16: அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித் துறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT