Published : 17 Jun 2022 03:26 PM
Last Updated : 17 Jun 2022 03:26 PM
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூன் 15) அன்று பகுதி - 20இல் ‘நமது இந்தியா - 6’ (விடுதலைப் போராட்டம் - 1)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘கணிதம் - 2’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
கணிதம் - 2
1. முதல் 20 இரட்டைப்படை எண்களின் கூட்டுத்தொகை என்ன?
அ) 420 ஆ) 400 இ) 380 ஈ) 440
2. 1,3,9..... என்கிற பெருக்குத் தொடரில் 729 என்பது எத்தனையாவது உறுப்பு?
அ) 6 ஆ) 7 இ) 9 ஈ) 10
3. ஒரு கார் முதல் 50கி.மீ., தூரத்தை ஒரு மணி நேரத்திலும் 250 கி.மீ., தூரத்தை நான்கு மணி நேரத்திலும் கடக்கிறது எனில், மொத்த பயண தூரத்தில் அந்தக் கார் மணிக்கு ஒடிய சராசரி வேகம் எவ்வளவு?
அ) 65கி.மீ. ஆ) 50கி.மீ. இ) 60கி.மீ ஈ) எதுவுமில்லை
4. 1 முதல் 365 வரை எழுதும்போது மொத்தம் எத்தனை இலக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்?
அ) 999 ஆ)1095 இ)1000 ஈ) 987
5. 1 + 5 + 9+.......+57 இன் மதிப்பு என்ன?
அ) 415 ஆ) 435 இ) 455 ஈ) 335
6. (234×123) - (75 × 234) +(52 × 234) இன் மதிப்பு என்ன?
அ) 23458 ஆ) 34200 இ) 23400 ஈ) 42300
7. இரு எண்கள் 3 : 4 என்கிற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வித்தியாசம் 34 எனில் அவற்றில் மிகச்சிறிய எண் எது?
அ) 68 ஆ) 136 இ) 34 ஈ) 102
8. கீழ்க்கண்ட எண்களில் எந்த எண் 24 ஆல் மீதியின்றி வகுபடும்?
அ) 735648 ஆ) 735804 இ) 537804 ஈ) 456789
9. இரு எண்களின் கூட்டுத்தொகையும் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமும் முறையே 28, 4 எனில் அவ்விரு எண்களின் பெருக்கற்பலன் யாது?
அ) 768 ஆ) 112 இ) 192 ஈ) 144
10. இரு எண்களின் மீச்சிறு மடங்கு 630. மேலும் மீப்பெரு வகு எண் 6. அவற்றில் ஒரு எண் 126 எனில் மற்றொரு எண் என்ன?
அ) 72 ஆ) 60 இ) 36 ஈ) 30
11. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் ஆகின்றன. 45 ஆட்கள் அதிகமாக இருந்தால் அதை முடிக்க 25நாட்கள் ஆகிறது எனில் முதலில் அமர்த்தப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை என்ன?
அ) 75 ஆ) 45 இ) 50 ஈ) 60
12. இரு பொதுமைய வட்டங்களின் ஆரங்கள் முறையே 17செ.மீ. ,11செ.மீ. எனில் இரு வட்டங்களுக்கு இடையேயான பகுதியின் பரப்பு என்ன?
அ) 264ச.செ.மீ ஆ) 528ச.செ.மீ இ) 288ச.செ.மீ. ஈ) 324 ச.செ.மீ.
13. 8மீ. உயரமுள்ள ஒரு கம்பத்தின் நிழல் 6மீ. ஆக உள்ளது எனில் ஒரு மரத்தின் நிழல் 12மீ. ஆக இருக்கும்போது அம்மரத்தின் உயரம் என்ன?
அ) 24மீ. ஆ) 18மீ. இ) 14மீ. ஈ) 16மீ.
14. ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 14 ஐ கூட்டக் கிடைப்பது 170 என்றால் அந்த எண் என்ன?
அ) 12 ஆ) 14 இ) 13 ஈ) 11
15. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் சராசரி வயது 14.9 ஆண்டுகள். அவ்வகுப்பில் உள்ள பையன்களின் சராசரி வயது 15.4 ஆண்டுகள். மேலும், அவ்வகுப்பில் உள்ள பெண்களின் சராசரி வயது 14.6 ஆண்டுகள். அப்படியென்றால் அவ்வகுப்பில் உள்ள பையன்கள், பெண்கள் எண்ணிக்கைக்கான விகிதம் யாது?
அ) 1 : 1 ஆ) 3 : 5 இ) 3 : 4 ஈ) 5 : 3
16. 14செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தில் ஆரத்தின் நீளம் 10% குறைக்கப்படுகிறது எனில் அவ்வட்டத்தின் பரப்பு எத்தனை சதவீதம் குறையும்?
அ) 19 ஆ) 20 இ) 15 ஈ) 10
17. கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20% குறைத்தால் ₹720க்கு அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்கமுடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலை என்ன?
அ) ரூ 60 ஆ) ரூ 50 இ) ரூ 48 ஈ) ரூ 72
18. ஒரு கன உருளையின் விட்டம் 14செ.மீ. அதன் உயரம் 20 செ.மீ. எனில் அதன் கன அளவு யாது?
அ) 6160 க.செ.மீ ஆ) 3080 க.செ.மீ இ) 1540க.செ.மீ ஈ) எதுவுமில்லை
19.18 லிட்டர் உள்ள திரவத்தில் பாலும் நீரும் 8 : 1 என்கிற விகிதத்தில் உள்ளன. எத்தனை லிட்டர் பாலைச் சேர்த்தால் அந்தக்கலவை 9 : 1 என்கிற விகிதத்தில் அமையும்?
அ) 3லிட்டர் ஆ) 1லிட்டர் இ) 2லிட்டர் ஈ) 4 லிட்டர்
20. 24, 36, 30 இன் மீச் சிறுமடங்கு என்ன?
அ) 720 ஆ) 6 இ) 180 ஈ) 360
பகுதி 20இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்
1. இ. மும்பை
2. அ. 1920
3. இ. 1929
4. அ. வங்கமொழி
5. ஈ. 1904
6. ஈ. லாகூர்
7. இ. 1905
8. அ. ஹர் தயால்
9. ஆ. லக்னோ
10. ஈ. 1928
11. அ. மார்ச் 23, 1931
12. ஈ. சூர்யா சென்
13. ஆ. பகவதிசரண் வோரா
14. ஈ. கி.பி. 1934
15. ஈ. பாலகங்காதர திலகர்
16. ஆ. கோபாலகிருஷ்ண கோகலே
17. அ. தாதாபாய் நௌரோஜி
(இந்தியாவின் முதுபெரும் மனிதர்)
18. இ. தாதாபாய் நௌரோஜி
19. அ. லாலா லஜபதி ராய்
20. ஈ. கி.பி. 1905
(1911 இல் பிரிவினை ரத்து)
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment