Published : 03 Jun 2022 05:26 PM
Last Updated : 03 Jun 2022 05:26 PM
* 1817 ஆம் ஆண்டு கார்ல் வோன் டிராய்ஸ் என்கிற ஜெர்மானியர் குதிரையில்லா வண்டியைக் கண்டுபிடித்தார். அது அவருக்கு வேகமாகச் செல்ல உதவியது. இரு சக்கரங்களால் ஆன இந்த வண்டியில் மிதிக்கக்கூடிய பெடல்கள் இல்லை. கால்களால் தரையில் உந்தித் தள்ளித்தான் சக்கரங்களை நகர்ந்த முடியும். இந்த வண்டி ‘டிரைசின்’ என்று அழைக்கப்பட்டது. நவீன சைக்கிள் உருவாக்கத்துக்கு இது வழிவகுத்தது.
* 1870களில் ‘உயரமான சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்’ பிரபலமானதாக இருந்தது. ‘சைக்கிள்’ என்கிற சொல் 1860களில் அறிமுகமாகவில்லை. பிறகுதான் இரு சக்கரங்கள் என்று பொருள் படக்கூடிய ‘சைக்கிள்’ என்கிற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது.
* முதல் பறக்கும் விமானத்தை உருவாக்கிய ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள், ஆரம்பத்தில் சிறிய இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தனர்.
* 25 வயது ஃபிரெட் ஏ. பிர்ச்மோர், 1935 ஆம் ஆண்டு சைக்கிள் மூலம் உலகைச் சுற்றிவந்தார். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா என 40,000 மைல்களைக் கடந்தார். இதில் சுமார் 25,000 மைல்களை சைக்கிள் மூலம் கடந்தார். மீதி தொலைவைப் படகில் கடந்தார்.
* 1800களின் பிற்பகுதியில் சீனாவுக்கு சைக்கிள் கொண்டுவரப்பட்டது. இன்று 50 கோடி சைக்கிள்கள் சீனாவில் பயன்படுத்தப்படுகின்றன.
* நெதர்லாந்தில் 30 சதவீதப் பயணங்கள் சைக்கிள் மூலமே நடைபெறுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட 8 டச்சு மக்களில் 7 பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.
* உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.
* கடந்த 30 ஆண்டுகளில் சைக்கிள் மூலம் பொருள்களைக் கொண்டு சேர்ப்பது முக்கியமான தொழிலாக வளர்ந்துள்ளது.
* டூர் டி பிரான்ஸ் உலகின் மிகவும் பிரபலமான சைக்கிள் பந்தயங்களில் ஒன்று. 1903 இல் நிறுவப்பட்டது. இது சகிப்புத்தன்மையைப் பரிசோதிக்கும் விளையாட்டாகக் கருதப்படுகிறது.
* சைக்கிள் மோட்டோ கிராஸ் (BMX) எனும் சைக்கிள் போட்டி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT