Published : 30 May 2022 02:57 PM
Last Updated : 30 May 2022 02:57 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 13

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 27) அன்று பகுதி - 12இல் ‘தமிழ்நாடு - 4’ (மாவட்டங்கள், முக்கிய நகரங்கள்) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று 'பொது 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

பொது - 3

1. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் ‘யாயூஸ் சுல்தான் சலீம்’ தொங்கும் பாலம் எந்த நாட்டில் திறக்கப்பட்டுள்ளது?

அ. தாய்லாந்து ஆ. துருக்கி
இ. சீனா ஈ. ரஷ்யா

2. ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காயச் சந்தை இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?

அ. தமிழ்நாடு
ஆ. தெலங்கானா
இ. மகாராஷ்டிரம்
ஈ. கர்நாடகம்

3. ஆசியாவிலேயே மிகப் பெரிய உணவு சேமிப்புக் கிடங்கு தமிழ்நாட்டில் கோவில்பத்து என்ற ஊரில் அமைந்துள்ளது. கோவில்பத்து எந்த மாவட்டத்தில் உள்ளது?

அ. விருதுநகர் ஆ. சிவகங்கை
இ. நாகப்பட்டினம் ஈ. தஞ்சாவூர்

4. நுடோநாமி என்ற நிறுவனம் உலகின் முதல் தானியங்கி டாக்சி சேவையை எந்த நாட்டில் தொடங்கியது?

அ. ஜப்பான் ஆ. ஜெர்மனி
இ. அமெரிக்கா ஈ. சிங்கப்பூர்

5. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட GST எனும் சரக்கு, சேவை வரி மசோதா அரசமைப்புச் சட்டத்தின் எத்தனையாவது திருத்த மசோதாவாகும்?

அ. 122ஆவது ஆ. 121 ஆவது
இ. 123 ஆவது ஈ. 125 ஆவது

6. எந்த வருடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது?

அ. 1930 ஆ. 1935
இ. 1949 ஈ. 1947

7. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

அ. இந்தியா ஆ. சீனா
இ. கியூபா ஈ. பிரேசில்

8. மகாமகம் (மாமாங்கம்) எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது?

அ. 10 ஆ. 12
இ. 14 ஈ. 16

9. நீலப்புத்தகம் எந்த நாட்டு அரசாங்கப் புத்தகமாகும்?

அ. கனடா ஆ. அமெரிக்கா
இ. இங்கிலாந்து ஈ. ரஷ்யா

10. கீழ்க்கண்ட மலர்களுள் எந்த மலர் கனடா நாட்டின் தேசியச் சின்னம் ஆகும்?

அ. ரோஜா
ஆ. வெள்ளை அல்லி
இ. தாமரை
ஈ. சிவப்பு அல்லி

11. மிக இளம் வயதில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. வல்லபபாய் படேல்
ஆ. முகமது அலி ஜின்னா
இ. மகாத்மா காந்தி
ஈ. அபுல் கலாம் ஆசாத்

12. விண்வெளிக்கு ராக்கெட் மூலம் முதன்முதலில் அனுப்பப்பட்ட விலங்கு எது?
அ. நாய் ஆ. குரங்கு
இ. எலி ஈ. பூனை

13. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைக் கட்டியவர் யார்?

அ. குரு நானக்
ஆ. குரு அர்ஜுன் தேவ்
இ. குரு ராம்தாஸ்
ஈ. குரு கோவிந்த சிங்

14. கி.பி. 1907இல் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

அ. பேடன் பவல்
ஆ. ஹென்றி டேவிசன்
இ. ஹென்றி டியூனான்ட்
ஈ. பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

15. காக்கை இல்லாத நாடு எது?

அ. ஆஸ்திரியா
ஆ. நியூசிலாந்து
இ. பின்லாந்து
ஈ. நெதர்லாந்து

16. இந்தியாவின் அண்டை நாடுகளில் மிகச் சிறிய நாடு எது?

அ. இலங்கை ஆ. நேபாளம்
இ. பூடான் ஈ. வங்கதேசம்

17. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதல் வெளியிட்ட நாடு எது?

அ. இந்தியா
ஆ. பாகிஸ்தான்
இ. போலந்து
ஈ. தென்னாப்பிரிக்கா

18. ஐந்து கடல்களின் நாடு என அழைக்கப்படும் நாடு எது?

அ. லிபியா ஆ. இஸ்ரேல்
இ. எகிப்து ஈ. சூடான்

19. ஐரோப்பாவின் போர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?

அ. பெல்ஜியம்
ஆ. பின்லாந்து
இ. ஜெர்மனி
ஈ. இங்கிலாந்து

20. இயற்கையில் மனிதன் ஓர் அரசியல் மிருகம் எனக் குறிப்பிட்ட அறிஞர் யார்?

அ. சாக்ரடீஸ்
ஆ. அரிஸ்டாட்டில்
இ. ரூஸோ
ஈ. பிளாட்டோ

பகுதி 12இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்

1. ஈ) திருப்பூர் - ஜிகிர்தண்டா
(சரியானது - பனியன்)

2. இ) வாணியம்பாடி -வெற்றிலை
(சரியானது - பிரியாணி)

3. ஆ) A-2, B-1, C-4, D-3

4.ஆ) திண்டுக்கல்

5. அ) வெண்ணெய்

6. ஈ) நெல்லிக்குப்பம் (கடலூர் மாவட்டம்)

7. அ) முத்துமலை
(சேலம் மாவட்டம்)

8. ஆ) கும்பகோணம்

9. ஆ) செங்கல்பட்டு

10. இ) கி.பி. 10ஆம் நூற்றாண்டு

11. இ) கடலூர்

12. ஆ) சோவியத் யூனியன்

13. ஆ) கிருஷ்ணகிரி

14. அ) விஜயநகரப் பேரரசு

15. இ) கரிசல் மண்

16. இ) சிவகங்கை

17. அ) சேலம்

18. இ) தஞ்சாவூர்

19. அ) பாப்பாரப்பட்டி

20. ஈ) திருச்சிராப்பள்ளி

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x