Published : 27 May 2022 02:02 PM
Last Updated : 27 May 2022 02:02 PM
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 25) அன்று பகுதி - 11 இல் இந்தியா - 4’ (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - ஆ)) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘தமிழ்நாடு - 4’ (மாவட்டங்கள், முக்கிய நகரங்கள்) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
‘தமிழ்நாடு - 4’ (மாவட்டங்கள், முக்கிய நகரங்கள்)
1. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
ஆ) சிவகாசி - பட்டாசு
இ) திண்டுக்கல் - பூட்டு
ஈ) திருப்பூர் - ஜிகர்தண்டா
2. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) பத்தமடை - பாய்
ஆ) ஆரணி - பட்டு
இ) வாணியம்பாடி - வெற்றிலை
ஈ) பவானி - ஜமக்காளம்
3. பொருத்துக:
A. திருப்பாச்சி - 1. விளக்கு
B. நாச்சியார்கோவில் - 2. அரிவாள்
C. மணப்பாறை - 3. நாய்
D. ராஜபாளையம் - 4. உழவுமாடு
அ) A-1, B-2, C-3, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-2, B-1, C-3, D-4 ஈ) A-1, B-3, C-4, D-2
4. கண்டாங்கிச் சேலைக்குப் புகழ்பெற்ற சின்னாளப்பட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) மதுரை ஆ) திண்டுக்கல்
இ) தேனி ஈ) விருதுநகர்
5. கீழ்க்கண்ட பொருள்களில் எதற்கு ஊத்துக்குளி சிறப்பு பெற்றது?
அ) வெண்ணெய் ஆ) தேன்
இ) வத்தல் ஈ) கருப்பட்டி
6. இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை இ.ஐ.டி. பாரி கம்பெனி எந்த நகரில் உள்ளது?
அ) திருமட்டங்குடி
ஆ) வடபாதிமங்கலம்
இ) தாழையூத்து
ஈ) நெல்லிக்குப்பம்
7. உலகின் உயரமான முருகன் சிலை (146அடி) தமிழ்நாட்டில்
எந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ளது?
அ) முத்து மலை
ஆ) பழனி மலை
இ) தான்தோன்றி மலை
ஈ) ஆணை மலை
8. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள ஆடுதுறை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) தஞ்சாவூர்
ஆ) கும்பகோணம்
இ) மயிலாடுதுறை
ஈ) நாகப்பட்டினம்
9. தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) காஞ்சிபுரம் ஆ) செங்கல்பட்டு
இ) கடலூர் ஈ) விழுப்புரம்
10. ராஜாதித்ய சோழ இளவரசரால் எந்த நூற்றாண்டில் வீராணம் ஏரி வெட்டப்பட்டது?
அ) கி.பி. 8ஆம் நூற்றாண்டு
ஆ) கி.பி. 9ஆம் நூற்றாண்டு
இ) கி.பி. 10ஆம் நூற்றாண்டு
ஈ) கி.பி. 11ஆம் நூற்றாண்டு
11. தமிழக முந்திரி உற்பத்தியில் முதன்மை மாவட்டம் எது?
அ) புதுக்கோட்டை
ஆ) செங்கல்பட்டு
இ) கடலூர்
ஈ) விழுப்புரம்
12. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கி.பி.1956 ஆம் வருடம் எந்த நாட்டின் உதவியுடன் நிறுவப்பட்டது?
அ) ஜெர்மனி
ஆ) சோவியத் யூனியன்
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்கா
13. தமிழக கேழ்வரகு உற்பத்தியில் முதன்மை மாவட்டம் எது?
அ) ராமநாதபுரம்
ஆ) கிருஷ்ணகிரி
இ) சிவகங்கை
ஈ) விருதுநகர்
14. கறுப்பு மலை எனப் பொருள்படும் கிருஷ்ணகிரி மலைக்கோட்டையை எந்தப் பேரரசு கட்டியது?
அ) விஜயநகரப் பேரரசு
ஆ) சோழப் பேரரசு
இ) பல்லவப் பேரரசு
ஈ) சாளுக்கியப் பேரரசு
15. பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற எந்த வகை மண் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிறைந்துள்ளது?
அ) வண்டல் மண்
ஆ) துருக்கல் மண்
இ) கரிசல் மண்
ஈ) செம்மண்
16. தமிழகத்தின் முதல் செம்மண் நில ஆராய்ச்சி மையம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?
அ) மதுரை
ஆ) கன்னியாகுமரி
இ) சிவகங்கை
ஈ) விருதுநகர்
17. இந்திய அளவில் அதிக மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் எந்த மாவட்டம் கருதப்படுகிறது?
அ) சேலம்
ஆ) கன்னியாகுமரி
இ) சிவகங்கை
ஈ) ராமநாதபுரம்
18. ‘இந்தியப் பயிர்ப் பதனக் கழகம்’, தமிழ்நாட்டில் எந்த நகரில் அமைந்துள்ளது?
அ) காஞ்சிபுரம்
ஆ) கும்பகோணம்
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
19. விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டிய ‘பாரதமாதா ஆலயம்’ எங்கு அமைந்துள்ளது?
அ) பாப்பாரப்பட்டி
ஆ) கோவில்பட்டி
இ) வத்தலகுண்டு
ஈ) பாலக்கோடு
20. ‘கனரக இரும்புக் கட்டுமானத்துறை’யின் மையம் எனப் புகழ்பெற்ற மாவட்டம் எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) திருவள்ளூர்
இ) சேலம்
ஈ) திருச்சிராப்பள்ளி
பகுதி-11இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்
விடைகள்
1. அ) புரி
2. இ) கட்டாக் (ஒடிசா)
3. அ) அந்தமான் தீவு
4. ஆ) உதய்பூர் (ராஜஸ்தான்)
5. ஈ) பொக்ரான் (ராஜஸ்தான்)
6. இ) ஜம்மு - காஷ்மீர்
7. அ) கொல்கத்தா
8. ஆ) கௌசாணி (உத்தராகண்ட்)
9. ஆ) ஜெய்ப்பூர் ( ராஜஸ்தான்)
10. ஆ) மகாராஷ்டிரம் (ஔரங்காபாத்)
11. அ) யுவான் சுவாங்
12. இ) கொல்கத்தா
13. ஆ) உத்தர பிரதேசம்
14. இ) உத்தராகண்ட்
15. ஆ) சென்னை
16. ஆ) அந்தமான் நிகோபர் தீவுகள்
17. ஈ) மேற்கு வங்கம்
18. இ) 1972
19. ஆ) இமாச்சல பிரதேசம்
20. அ) கேரளம்
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment