Published : 23 May 2022 03:51 PM
Last Updated : 23 May 2022 03:51 PM
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 20) அன்று பகுதி-9 இல் தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது- 2’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
பொது - 2
1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஓரிகாமி என்னும் கலையைக் கண்டறிந்தவர்கள் யார்?
அ) இத்தாலியர் ஆ) ஜப்பானியர்
இ) சீனர் ஈ) இந்தியர்
2. உலகில் பாம்பு இனம் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படுகிறது?
அ) நூறு கோடி ஆ) ஒரு கோடி
இ) பத்து கோடி ஈ) ஆயிரம் கோடி
3. ‘போரும் அமைதியும்’ (War and Peace) என்கிற நூலை எழுதியவர் யார்?
அ) வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆ) ஜான் மில்டன்
இ) பிளாட்டோ ஈ) லியோ டால்ஸ்டாய்
4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எந்த நாட்டில் உள்ளது?
அ) இங்கிலாந்து ஆ) அமெரிக்கா
இ) தென்னாப்பிரிக்கா ஈ) ரஷ்யா
5. கீழ்க்கண்ட தொடர்களில் பெரியாருக்குப் பொருத்தமற்றது எது?
அ) இந்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
ஆ) பகுத்தறிவாளர் சங்கத்தை நிறுவினார்
இ) யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது
ஈ) வைக்கம் வீரர் எனப் போற்றப்பட்டார்
6. மேரி கியூரிக்கு (1867-1934) பொருத்தமற்ற தொடர் எது?
அ) பிறந்த நாடு இங்கிலாந்து.
ஆ) இரண்டாம் முறை நோபல் பரிசு 1909இல் கிடைத்தது.
இ) பியரி கியூரி, மேரி கியூரி இருவரும் சேர்ந்து 1903இல் நோபல் பரிசு பெற்றனர்.
ஈ) பியரி கியூரி, மேரி கியூரி இருவரும் சேர்ந்து முதன்முதலில் பொலோனியத்தையும் ரேடியத்தையும் கண்டறிந்தனர்.
7. கணிதமேதை ராமானுஜத்தின் 75ஆவது பிறந்தநாளையொட்டி அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அவருடைய 125ஆவது பிறந்தநாள் எப்போது கொண்டாடப்பட்டது?
அ) 28-02-2012 ஆ) 07-04-2012
இ) 22-12-2012 ஈ) 08-05-2012
8. பொருத்துக :
A. ஷேக்ஸ்பியர் - 1. ஆங்கில நாடக ஆசிரியர்
B. மில்டன் - 2. ஆங்கிலக் கவிஞர்
C. பிளாட்டோ - 3. ரஷ்ய எழுத்தாளர்
D. டால்ஸ்டாய் - 4. கிரேக்கச் சிந்தனையாளர்
அ) A-1, B-2, C-3, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-1, B-2, C-4, D-3
9. முதன்முதலில் இளங்கலை பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளி யார்?
அ) மேரி கியூரி ஆ) ஜார்ஜ் பெர்னாட் ஷா
இ) ஹெலன் கெல்லர் ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
10. கீழ்க்கண்ட நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகள் எவை?
1. இலங்கை 2. சிங்கப்பூர்
3. மலேசியா
அ) 1, 2, 3 ஆ) 1, 2
இ) 2, 3 ஈ) 1, 3
11. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் எது?
அ) தூத்துக்குடி ஆ) காஞ்சிபுரம்
இ) மதுரை ஈ) கும்பகோணம்
12. பொருத்துக:
A. கணக்கிடும் கருவி - 1. ஹோவார்டு ஜக்கன்
B. கணிணி - 2. சார்லஸ் பாபேஜ்
C. எண்ணிலக்கக் கணிணி - 3. பிளேஸ் பாஸ்கல்
D. வலைப்பின்னல் - 4. பிம் பெர்னர்லீ
அ) A-3, B-2, C-1, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-1, B-2, C-4, D-3
13. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என முதன்முதலில் கூறியவர் யார்?
அ) கலிலியோ (இத்தாலி)
ஆ) தாலமி (எகிப்து)
இ) ஆரியபட்டர் (இந்தியா)
ஈ) கோபர்நிக்கஸ் (போலந்து)
14. அறிஞர் அண்ணாவால் தமிழகத்தின் ஆனி பெசன்ட் என அழைக்கப்பட்டவர் யார்?
அ) டாக்டர் முத்துலெட்சுமி
ஆ) குந்தவை நாச்சியார்
இ) மூவலூர் ராமாமிர்தம்
ஈ) ராணி மங்கம்மாள்
15. தூமகேது எனப்படுவது எது?
அ) ராகு, கேது
ஆ) வால் நட்சத்திரம்
இ) சனி
ஈ) நாள்மீன்
16. வருடந்தோறும் உலக வனவிலங்கு நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
அ) செப்டம்பர் 4
ஆ) டிசம்பர் 4
இ) நவம்பர் 4
ஈ) அக்டோபர் 4
17. பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளி அமெரிக்காவில் எந்த நகரத்தில் உள்ளது?
அ) பாஸ்டன் ஆ) சிகாகோ
இ) நியுயார்க் ஈ) வாஷிங்டன்
18. ரீயூனியன் தீவில் வாழும் தமிழர்கள் எந்த நாட்டவர்களால் ஒப்பந்தக் கூலிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்?
அ) ஆஸ்திரேலியா ஆ) பிரான்ஸ்
இ) இங்கிலாந்து ஈ) இலங்கை
19. வள்ளுவர் கூறும் ஞானப்பச்சிலை எது?
அ) துளசி ஆ) குப்பைமேனி
இ) தூதுவளை ஈ) கீழாநெல்லி
20. பொருத்துக:
A. பூச்சிக்கடி - 1. துளசி
B. இருமல் - 2. தூதுவளை
C. மஞ்சள்காமாலை - 3. கீழாநெல்லி
D. மார்புச்சளி - 4. குப்பைமேனி
அ) A1, B-2, C-3, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-4, B-2, C-3, D-1
பகுதி 9இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்
1. ஆ) ராபர்ட் பூருஸ்பட்
2. இ) இரும்பு
3. அ) திருநெல்வேலி
4. இ) கழுகு மலை
5. ஆ) செங்குட்டுவன்
6. ஈ) பேட்டவாய்த்தலை
7. ஆ) நெடுஞ்செழியன்
8. அ) அச்சுதப்ப நாயக்கர்
9. இ) செவப்ப நாயக்கர்
10. ஈ) விஸ்வநாத நாயக்கர்
11. இ) சிவாஜி
12. ஈ) புலித்தேவன்
13. ஆ) 1761
14. இ) இரண்டாம் சரபோஜி
15. ஈ) 1934
16. இ) வ.வே.சு. அய்யர்
17. ஆ) 1806
18. அ) 1820
19. அ) சோழர்கள்
20. ஆ) முதலாம் ராஜேந்திரன்
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT