Published : 03 May 2022 02:23 PM
Last Updated : 03 May 2022 02:23 PM

டெக் ஷார்ட்கட்ஸ்: யூ டியூப்பில் ஆடியோ மட்டும் கேட்க வேண்டுமா?

சுரேஷ் கோபி

யூடியூப் இன்று நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. செய்தி, சமையல், கேளிக்கை, சினிமா, கல்வி, தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், அது குறித்து நாம் தேடும் இடம் யூடியூப் ஆகவே இருக்கிறது. யூடியூப் செயலியைப் பொறுத்தவரை, அதில் நாம் அனைத்தையும் வீடியோ வடிவில்தான் பார்க்க முடியும். அதில் ஒளி இன்றி ஒலியை மட்டும் கேட்க முடியாது. அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ இருக்கும்போது இது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது, யூடியூப் திரையை மினிமைஸ் செய்தோ அல்லது மொபைல் திரையை லாக் செய்தோ நம்மால் யூடியூப்பில் வீடியோ பார்க்க முடியாது. அந்த வசதி தேவை என்றால், அதற்கு நாம் யூடியூப்பில் கட்டணம் செலுத்து பிரீமியர் உறுப்பினராக மாற வேண்டும். இதற்கும் கட்டணமா என்று நீங்கள் சலிப்படைய வேண்டாம். அதற்கு ஃபயர் பாக்ஸ் பிரவுசரில் ஒரு வழி இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

  • கூகுள் பிளே ஸ்டோரில் ஃபயர் பாக்ஸ் பிரவுசரைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • ஃபயர் பாக்ஸ் பிரவுசரை ஒபன் செய்யுங்கள்
  • அதில் யூடியூப் தளத்திற்குச் செல்லுங்கள்
  • யூ டியூபில் உங்களுக்கு விருப்பமான வீடியோவைத் தேர்வு செய்யுங்கள்.
  • இடது கீழ்புறம் உள்ள மூன்று புள்ளி இருக்கும் பட்டனை அழுத்துங்கள்.
  • அதில் டெஸ்க்டாப் வெர்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது அந்த வீடியோவை பிளே செய்துவிட்டு, நீங்கள் பிரவுசரை மினிமைஸ் செய்யலாம்; மொபைல் திரையை லாக் செய்யலாம்; ஓளி இல்லாமல் ஒலியை மட்டும் கேட்டு ரசிக்கலாம்.

முயன்று பாருங்கள்.

- சுரேஷ் கோபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x