Published : 27 Apr 2022 11:54 AM Last Updated : 27 Apr 2022 11:54 AM
ப்ரீமியம் காய்ச்சலைக் குணப்படுத்த சித்த மருத்துவம் அளிக்கும் எளிய டிப்ஸ்
பன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பறவை காய்ச்சல், மர்மக்காய்ச்சல் எனப் பல வகை காய்ச்சல்கள் உள்ளன. இந்தக் காய்ச்சல்கள் அனைத்தும் கொசுக்களின் மூலமே அதிகமாகப் பரவுகின்றன. இவை ஏற்படும்போது தசை, மூட்டு வலிகள் அதிகமாக இருக்கும். உடல் சோர்வுடன் காணப்படும். கொசுக்கடியால் பரவும் அனைத்து வகையாகக் காய்ச்சலுக்கும் சித்த மருத்துவம் அளிக்கும் எளிய சிகிச்சை முறை:
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் என எடுத்து, அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி 30 மி.லி வீதம் கொடுத்து வரக் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வகை காய்ச்சலும் தீரும். நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலும், டைபாய்டு எதிர்ப்பு ஆற்றலும் உண்டு.
நிலவேம்புடன் சிறிதளவு பப்பாளி இலையையும் சேர்த்து கசாயம் வைத்துக் குடிக்கலாம்.
விஷ்ணு கிராந்தி இலையுடன் துளசி, ஆடாதோடை, தும்பை, வெள்ளறுகு, சம அளவு சேர்த்து புட்டு போல் அவித்து எடுத்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட நீண்ட நாள் காய்ச்சல், விஷக் காய்ச்சல் குணமாகும்.
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் என எடுத்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினம் 6 வேளை 50 மி லி கொடுக்க நச்சுக்காய்ச்சல் குணமாகும், காய்ச்சல் வராமலும் தடுக்கும்.
நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சா வேர் 40 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடித்து 30 மி.லி யாகக் காலை, மதியம், மாலை கொடுத்து வரக் காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும்.
தான்றிக்காய் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
ஓமவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக்காய்ச்சல் குணமாகும்.
அகத்தி மரத்தின் பட்டையை இடித்து தண்ணீரில் கலந்து காய்ச்சி குடிக்க விஷக் காய்ச்சல் போய்விடும்.
WRITE A COMMENT