Published : 07 Aug 2021 07:09 AM
Last Updated : 07 Aug 2021 07:09 AM
கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தேவையில்லையா?
பதில் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் சுலைமான்:
கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகைகள் மூலம் 2002இல் பரவிய சார்ஸ் (SARS-CoV), 2012இல் பரவிய மெர்ஸ் (MERS-CoV) தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தந்த தொற்றுக்கு எதிரணுக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் நாவல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அந்த வைரஸுக்கு எதிரான எதிரணுக்கள் இருக்கும் என்பதால் தடுப்பூசி தேவையில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், தற்போது புதுப்புது வேற்றுருக்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். இவர்களுக்கு மறுமுறை வைரஸ் தொற்று ஏற்பட்டால் வீரியத்துடன் வைரஸை எதிர்க்க இந்தத் தடுப்பூசி உதவும்.
கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் நோயிலிருந்து மீண்ட இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். வெளி நாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தாலோ வேறு ஏதேனும் அவசரத் தேவை இருந்தாலோ ஒரு மாதம் கழித்துத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT