Published : 08 Dec 2015 04:11 PM
Last Updated : 08 Dec 2015 04:11 PM
நூற்றாண்டு காணாத வெள்ளம்
இந்த ஆண்டு பருவ மழை, சென்னையில் ஒரு நூறாண்டு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் 24 மணிநேரத்தில் 29.4 செ.மீ மழை டிசம்பர் 1, 2 தேதிகளில் பதிவாகியிருந்தது. சென்னையில் ஒரேநாளில் இந்த அளவுக்கு மழை, கடைசியாக டிசம்பர் 10, 1901-ம் ஆண்டுதான் பெய்திருக்கிறது. அது 26.6 செ.மீ மழையாகப் பதிவாகியிருக்கிறது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவைவிட இந்த ஆண்டு சென்னையில் ஐம்பது சதவீதம் மழை அதிகமாகப் பெய்திருக்கிறது.
இதனால், சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் நிரம்பிவழிந்தன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட 32,000 கன அடி தண்ணீரால் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் சென்னையில் பலியாகியிருக்கின்றனர்.
பாரீஸில் பருவநிலை மாநாடு
ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ம் தேதிவரை பாரீஸில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களைப் பொருத்தே உலகின் வெப்பநிலை மாற்றத்தையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். மாநாட்டின் முதல் வாரத்தில் இன்னும் எந்த முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து ஒரு பருவநிலை ஒப்பந்தத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், 2009 கோபன்ஹெகன் மாநாடு தோல்வியில் முடிந்தது. அந்த நிலை இம்முறையும் ஏற்படக் கூடாது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த மாநாடு வெற்றிபெற்றால், உலகின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுடன் கட்டுப்படுத்த முடியும். பசுமைக்குடில் வாயுக்களை 2050- க்குள் 60 சதவீதம் குறைக்கமுடியும்.
காடுகள் பெருகியிருக்கின்றன
இந்தியாவின் காட்டுப் பகுதிகள் 2013 முதல் 3,775 சதுர கி.மீ அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். தற்போது இந்தியாவில் காட்டுப்பகுதிகள் 7,01,673 சதுர. கிமீ அளவுக்கு இருக்கின்றன. இது நாட்டின் நிலப்பரப்பில் 21.34 சதவீதம் . மரங்களின் எண்ணிக்கையும் சேர்த்தால், 24.16 சதவீதம் காட்டுப் பகுதி இருக்கிறது என்று தெரிவிக்கிறது 2015 இந்திய மாநில வன அறிக்கை. “இந்தக் காட்டுப் பகுதிகளை 24 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு (2,501 சதுர கிமீ), கேரளா (1,317 சதுர கிமீ), ஜம்மு-காஷ்மீர் (450 சதுர கிமீ) உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் காட்டுப் பகுதிகள் அதிகரித்திருக்கின்றன.
சிங்கங்களுடன் தூங்கலாம்
லண்டன் உயிரியல் பூங்கா, சிங்கங்களுடன் தங்குவதற்கு ஒரு புதிய ‘சஃபாரி லாட்ஜ்’ ஒன்றை அறிவித்திருக்கிறது. ‘அறையுடன் ஓர் உயிரியல் பூங்கா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இடம் ஆசிய சிங்கங்கள் வசிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து மக்கள் இந்த அறையில் தங்கிக்கொள்ளலாம். ஒரு நாள் இரவு தங்குவதற்கு 378 பவுண்ட்(38,070 ரூபாய்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் தங்குவதற்கு 558 (56,199 ரூபாய்) பவுண்ட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “ஆசிய சிங்கங்களுக்கு அருகில் தூங்குவது ஓர் அற்புதமான அனுபவமாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார் உயிரியல் பூங்காவின் தலைவர் எம்மா டெய்லர்.
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு சோதனை
ஐரோப்பிய விண்வெளி மையம்(இஎஸ்ஏ), ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டைச் சோதனை செய்வதற்காக ஒரு முன்மாதிரி ஆய்வுக்கூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு வெளியான நூற்றாண்டு இது. இஎஸ்ஏவின் தளம் அமைந்திருக்கும் பிரெஞ்சு கயானாவிலிருந்து செல்லும் ‘வேகா’என்னும் ஒளி ராக்கெட், லிசா பாத்ஃபைண்டருடன் (LISA Pathfinder)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT