Last Updated : 26 Aug, 2020 08:59 AM

 

Published : 26 Aug 2020 08:59 AM
Last Updated : 26 Aug 2020 08:59 AM

படமும் செய்தியும்: புத்திசாலி டால்பின்கள்!

# 36 வகை கடல் டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் அதிக அளவில் காணப்படுவது பாட்டில் மூக்கு டால்பின்கள்தாம். ஸ்காட்லாந்து கடல் பகுதியில் அதிக அளவில் பாட்டில் மூக்கு டால்பின்கள் வாழ்கின்றன.

# அமேசான் நதியில் 4 வகை டால்பின்கள் வாழ்கின்றன.

#கடல் போக்குவரத்தால் ஏற்படும் ஒலி மாசு, கடல் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தல் போன்ற செயல்பாடுகளால் கடல்வாழ் பாலூட்டிகள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகின்றன. இதனால் இரை கிடைப்பது, இனப்பெருக்கம் செய்வது, தகவல்கள் பரிமாறுவது போன்ற செயல்பாடுகள் மிகவும் பாதிப்படைகின்றன.

# இரையைத் தண்ணீரின் மேற்பரப்புக்கு வரவழைப்பதற்காக நீர்க்குமிழ்களை உருவாக்குக்கின்றன டால்பின்கள்.

# டால்பின்களால் விதவிதமான ஒலிகளை வெளிப்படுத்த முடியும்.

# கண்ணாடியில் தன் பிம்பத்தை அடையாளம் காட்டும் பரிசோதனையில் பாட்டில் மூக்கு டால்பின்கள் வெற்றி பெற்றுள்ளன.

# டால்பின்கள் கூட்டமாக வசிக்கக்கூடியவை.

# பார்வைத் திறனும் கேட்கும் திறனும் டால்பின்களுக்குச் சிறப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x