Published : 12 May 2020 09:37 AM
Last Updated : 12 May 2020 09:37 AM
மிது
கரோனா ஊரடங்கு 45 நாட்களைக் கடந்துவிட்டது. இந்த 45 நாட்களில் இந்தியர்கள் தங்கள் பொழுதுகளை பெரும்பாலும் தொலைக்காட்சி அலை வரிசைகள், சமூக ஊடங்களிலேயே கழித்து வருகிறார்கள். குறிப்பாக சீன நிறுவனமான டிக்டாக்கை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
* ஊரடங்குக்கு முன்பு டிக்டாக் செயலியில் இந்தியர்கள் சராசரியாக 39.5 நிமிடங்களைச் செலவிட்டு வந்துள்ளனர். ஊரடங்குக்குப் பிறகு இது 56.9 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
* லைவ் வீடியோ ஸ்ட்ரீம் செயலிகளிலும் இந்தியர்கள் அதிகமாகக் களமாடியுள்ளனர். குறிப்பாக லைவ்.மீ என்ற இணையத்தில் இந்தியர்கள் செலவிட்ட நேரம் 66 சதவீதத்தி லிருந்து 315 சதவீதமாக இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
* இந்தியாவில் 80 கோடிப் பயனாளர்களைக் கொண்டுள்ளது ஃபேஸ்புக். இதில் செலவிடும் நேரம் ஊரடங்குக் காலத்தில் 45 நிமிடங்களிலிருந்து 65 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
* இதேபோல இன்ஸ்டாகிராமில் சராசரியாக 23 நிமிடங்கள் செலவிட்ட இந்தியர்கள், ஊரடங்குக் காலத்தில் 36 நிமிடங்கள் செலவழித்துள்ளனர்.
* ஊரடங்கு நாட்களில் நாள்தோறும் ஃபேஸ்புக் செயலியைத் திறக்கும் எண்ணிக்கை 13.9 முறையிலிருந்து 20.8 முறையாக அதிகரித்துள்ளது.
* அதேநேரம் மற்ற செயலிகளைத் திறக்கும் எண்ணிக்கை: இன்ஸ்டாகிராம் 12-லிருந்து 19 ஆகவும், டிக்டாக் 8.6-லிருந்து 13.2 ஆகவும் ட்விட்டர் 7.9-லிருந்து 10.5 முறையாகவும் அதிகரித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT