Published : 04 Aug 2015 01:08 PM
Last Updated : 04 Aug 2015 01:08 PM
குறைந்த காற்றில் நிறைந்த மின்சாரத்தைத் தரும் காற்றாலை இறக்கையைக் கண்டு பிடித்துள்ளனர் கோவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள். கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் பிரசன்னா வெங்கடேஷ் (29), விரிவுரையாளர் கபார்கான் ( 29), உதவி ஆராய்ச்சியாளர் கார்த்திக் (25) ஆகியோர் வானூர்தித் துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் ஏ.பி.ஹரன் வழிகாட்டலின்படி இதனைச் செய்துள்ளனர்.
காற்றாலைகள்
வீடுகள், அலுவலகங் களுக்கான சிறிய காற்றாலை களைப் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதற்கான இறக்கைகள் 1.5 முதல் 2 மீட்டர் வரை இருக்கும். நகரில் கட்டிடங்கள் நிறைந்துள்ள குடியிருப்புகளுக்குள் இவை வைக்கப்படும். அவை இயங்கப் போதிய காற்று கிடைப்பதில்லை.
அந்த இறக்கைகளின் எடையைக் குறைத்தால் அது வேகமாகச் சுற்றும் அல்லவா? இப்போதைய இறக்கைகளின் எடையை ஏறக்குறையப் பாதியளவு குறைத்து 2.7 கிலோ எடையுள்ள இறக்கைகளைத் தயாரித்துள்ளனர் இந்த இளைஞர்கள் மூவரும்.
இந்தக் காற்றாலை இறக்கைக்குள் ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல், குறிப்பிட்ட திரவம் உள்ளிட்ட ஒரு பலவற்றைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். தற்போது புழக்கத்தில் இருக்கும் மற்ற இறக்கைகளைவிட குறைந்த காற்றிலேயே விநாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் சுற்றக்கூடியதாக அமைத்துள்ளனர். காப் இதை புரிமையும் பெற்றுள்ளனர்.
அழைப்புகள்
“கோவையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இதைப் பார்வையிட்ட தேசியக் காற்றாலை மின்சார உற்பத்தி கூட்டமைப்பின் தலைவர் கஸ்தூரி ரங்கன் பாராட்டினார்!” என்கிறார் பேராசிரியர் ஏ.பி. ஹரன்.
இந்தக் காற்றாலை வடிவமைப்பினை வாங்குவதற்கு இரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளனவாம். அது தவிர புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திலிருந்தும் அழைப்பு வந்துள்ளதாம். அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்! என்கிறார்கள் இவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT