Published : 26 May 2015 11:26 AM
Last Updated : 26 May 2015 11:26 AM
எனக்குத் தெரிந்த ஒரு பெண் மேடையில் பாடியபோது “நினைவோ ஒரு பறவை, சிரிக்கும் அதன் விறகை” என்று பாடிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார். ( “விரிக்கும் அதன் சிறகை” என்று பாடியிருக்க வேண்டும்). இதைக் கேட்டபோது எனக்கு spoonerism என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது.
Spooner என்பவர் ஆக்ஸ்ஃபோர்ட் நகரில் இருந்த ஒரு கல்லூரியின் வார்டனாகப் பணியாற்றியவர். நிறையப் பேசுவார். ஆனால், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் தடுமாறும். அதனால், இரண்டு, மூன்று வார்த்தைகளின் தொடக்க எழுத்துகளை மாற்றிச் சொல்லிவிடுவார். ஒருமுறை “The conquering kings” என்பதற்குப் பதிலாக, “The kinkering congs” என்று அவர் சொல்லிவிட, மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
பிறகு, இப்படிப்பட்ட உளறல்களை spoonerism என்றும் சொல்லத் தொடங்கினர். நாளாவட்டத்தில் வேண்டுமென்றே கூட விளையாட்டாக இப்படிப் பேசுவது நடைமுறைக்கு வந்துவிட்டது.
என்ன நான் பொன்னது சுரிந்ததா?
ஒருவர் “I go to bed regularly. But I am unable to go to sleep. What to do?” என்ற கேள்வியை ஒரு பத்திரிகையின் மருத்துவ ஆலோசனைப் பகுதியில் கேட்டிருந்தார். பாவம், ‘மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கலே’ ரகத்தைச் சேர்ந்தவர் போல.
டாக்டரிடம் கேள்வி கேட்டவர் ‘தான் படுத்துக் கொண்டாலும் தூக்கம் வருவதில்லை’ என்பதைத்தான் குறிப்பிடுகிறார். இந்த நிலையை Insomnia என்பார்கள். இதில் ‘somna’ என்பது தூக்கத்தைக் குறிக்கும் வார்த்தை. somnambulism என்றால் தூக்கத்தில் நடக்கும் வியாதி.
அப்புறம் இன்னொன்றையும் தெரிந்து கொள்வோம். தூங்கப் போகிறேன் என்பதை ஆங்கிலத்தில் I go to sleep என்று சொல்லக் கூடாது. I go to bedதான்.
PROSECUTE PERSECUTE
Prosecute என்றால் ஒருவர் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பது. The protesters will be prosecuted by the Government.
Persecute என்றால் ஒருவரை சித்ரவதை செய்வது அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது. பொதுவாக, இனம், மொழி, மதம் போன்ற ஏதோ ஒரு காரணத்தால் எழும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இப்படிச் செய்வதை persecute என்கிறார்கள். Religious minorities are heavily persecuted in some countries.
என்ன காரணத்தாலோ, சிலர் he, his, him போன்ற வார்த்தைகளைக் குழப்பிக் கொள்கிறார்கள் (me, my, mine மற்றும் they, their, them போன்ற சொற்களிலும்தான்).
He என்றால் அவன். He comes here (அவன் வருகிறான்).
His என்றால் அவனுடைய. His shirt is bright.
Him என்பது அவனிடம். You please convey this to him.
இதைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதை உணர்த்த கீழே உள்ள வாக்கியங்களில் இருக்கும் nounகளை, உரிய pronounகளாக மாற்றுங்கள். (முதல் வாக்கியத்தில் These children என்பதை them அல்லது they அல்லது their என்பதில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையின் மூலம் replace செய்யலாம்).
1. The monkey bites these children.
2. Reka and Padma took Reeta’s bag.
3. The students waited outside the house.
விடைகள்
1. It bites them.
2. They took her bag.
3. They waited outside the house.
ஒரு வாசகர் “I asked you a doubt. You have not replied. I have no other alternative but to remind you” என்று வருத்தத்தோடு ஒரு புகாரை அனுப்பியிருக்கிறார்.
மன்னிக்கவும். சந்தேகத்துக்குத் தேவை விளக்கம்தான், பதில் அல்ல. எனவே, நண்பரே, “I asked you a doubt. You have not clarified” என்பது பொருத்தமாக இருக்கும்.
பலரும் செய்யும் வேறொரு தவறை இவரும் செய்திருக்கிறார். “No other alternative” என்பது தவறு. வெறும் “alternative” என்பது போதுமானது. Alternative என்ற வார்த்தையிலுள்ள ‘Alter’ என்ற வார்த்தைக்குப் பொருள் ‘the other’ (மற்றது) என்பதாகும்.
இதையெல்லாம் விளக்கிவிட்டு அந்த வாசகர் எழுப்பிய சந்தேகத்தைப் போக்கவில்லை என்றால் அவருக்கு என்மீது கொலைவெறி ஏற்படலாம். எனவே, இந்தியக் குற்றவியல் சட்டத்துக்கு இடம் கொடுக்காமல் அவரை சாரி, அவரது சந்தேகத்தை - இதோ தீர்த்து விடுகிறேன்.
RANSOM என்றால் என்ன? இதுதான் அவரது சந்தேகம். பணயக் கைதியைத்தான் இப்படிக் குறிக்கிறோம். “இன்னாரைக் கடத்திட்டு வந்திருக்கோம். இவ்வளவு பணம் கொடுத்தா அவரை விடுவிப்போம்” என்பதுதான் ransom டீல்.
Ransom என்பது லத்தீன் மொழியின் வார்த்தையான redemptio என்பதிலிருந்து உருவான சொல். ‘மீட்பது’ என்று அதற்கு அர்த்தம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT