Published : 02 Dec 2014 12:17 PM
Last Updated : 02 Dec 2014 12:17 PM
எனக்குப் போதுமான நேரம் என்றுமே இருந்ததில்லை. இருக்கும் பணிகளையெல்லாம் எப்போது முடிக்கப்போகிறேன் என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது. இப்படி உங்களுக்கு அடிக்கடித் தோன்றுகிறதா? அப்படியானால், நேரத்தை எப்படி நிர்வகிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தற்போது இருப்பதைக் காட்டிலும் உங்களுடைய நேரத்தை ஆக்கப்பூர்வமாக நிர்வகிக்கத் தேவையான திறமைகளையும் நுட்பங்களையும் படிப்படியாக விளக்குகிறது ஃபராங்க் அட்கின்ஸனின் “வெற்றி தரும் நேர நிர்வாகம்” என்னும் புத்தகம். விற்பனையாளர்கள், மூத்த மேலாளர்கள், இயக்குநர்கள் உட்பட பலருக்கு நேர நிர்வாகப் பயிற்சி அளித்துவரும் இந்நூல் ஆசிரியர் உங்களுடைய சொந்த நேரத்தை நிர்வகிப்பது முதல் அலுவலகத்தில் திறமையாக நேரத்தை நிர்வகிப்பதுவரை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
ஆசிரியர்:ஃபராங்க் அட்கின்ஸன் |
தமிழாக்கம்: வெ.ராஜகோபால் |
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
A-2, ஜாஷ் சேம்பர்ஸ், 7அ சர் ஃபிரோஷா மேத்தா சாலை,
போர்ட், மும்பை 400 001.
jaicopub@jaicobooks.com | www.jaicobooks.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT