Published : 16 Dec 2014 03:51 PM
Last Updated : 16 Dec 2014 03:51 PM
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் டிப்ளமோ, பட்டம் படித்த பொறியியல் மாணவர்களுக்கான அப்ரண்டிஷிப் பயிற்சிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓர் ஆண்டு மட்டுமே இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
காலிப் பணியிடங்கள்: 390
மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கணினி உள்ளிட்ட பல பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வி: டெக்னிஷியன் அப்ரண்டிஷிப் ட்ரெயினிங் பணியிடத்துக்கு விண்ணப் பிக்க விருப்பமுடைய மாணவர்கள் பொறியியல் படிப்பில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் பிற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
கிராஜுவேட் அப்ரண்டிஷிப் ட்ரெயினிங் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய மாணவர்கள் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் பிற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
30.01.2012க்குப் பிறகு டிப்ளமோ, பட்டம் முடித்த பொறியியல் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் எந்த நிறுவனத்திலும் ஓர் ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்கக் கூடாது. என்.எல். சி.யில் ஏற்கனவே அப்ரண்டிஷிப் பயிற்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
கிராஜுவேட் அப்ரண்டிஷி ட்ரெயினிங் பணியிடத்துக்கு டிசம்பர் 15 அன்று காலை 10:00 மணி முதல் 24.12.2014 மாலை 5:00 மணி வரை www.nlcindia.com என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து கேட்கப் பட்ட சான்றிதழ்களின் நகல் களுடன் என்.எல்.சி.க்குத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்.
டெக்னிஷியன் அப்ரண்டிஷிப் ட்ரெயினிங் பணியிடத்துக்கு என் எல் சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கி அதைப் பூர்த்தி செய்து என்.எல்.சி. க்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இரண்டு பிரிவினரும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 03.01.2015.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager, Employee Development Centre, Neyveli Lignite Corporation Limited, Block:20, Neyveli – 607 803.
டிப்ளமோ, பட்டப் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் என்.எல்.சி.யின் இணையதளத்தில் 09.01.2015 (மாறுதலுக்குட்பட்டது) அன்று வெளியிடப்படலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: > www.nlcindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT