Published : 16 Dec 2014 03:18 PM
Last Updated : 16 Dec 2014 03:18 PM
மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் பல வலைத் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றுள் சில இதோ :
1. ஹாப்.காம் (half.com). இது புகழ்பெற்ற ஈபே தளத்தின் சேவை. ஈபே தளத்தின் மூலம் உபயோகித்த பொருட்களை வாங்கவோ, விற்கவோ முடியும். அது போல, இந்தத் தளம் , மாணவர்கள் தாங்களோ அல்லது மற்றவர்களோ உபயோகித்த பாடப் புத்தகத்தைக் குறைந்த விலைக்கு வாங்கவோ, விற்கவோ முடியும்.
2. கூபெர்ஸ் .காம்(koofers.com) இத்தளத்தில் மாணவர்கள் ஆன் லைனிலே தங்கள் திறன்களைப் பரிசோதித்துக்கொள்ள எளிய தேர்வுகளும், விடைகளும் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
3. ஆடிபிள்.காம் (audible.com). மாணவர்கள் புத்தகங்களைக் கையில் தூக்கிச் செல்லும் சிரமத்தை தவிர்க்கும் தளம். அமேசான் தளத்தில் இருந்து வரும் சேவை இது. இலவசமாக 30 நாட்களுக்கு நமக்கு வேண்டும் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். பின் தேவைப்பட்டால் பணம் செலுத்தி உபயோகிக்கலாம்.
4. க்விஸ்லட்.காம் (quizlet.com)- இத்தளம் ஆன்லைனில் க்விஸ் பயிற்சி செய்வதற்கு ஏற்ற தளம். நாம் விரும்பும் பாடத்தில், க்விஸ் பயிற்சி செய்யலாம்.
-எம். விக்னேஷ், மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT