Last Updated : 18 Jul, 2017 10:50 AM

 

Published : 18 Jul 2017 10:50 AM
Last Updated : 18 Jul 2017 10:50 AM

ஆங்கிலம் அறிவோமே 169: உங்களுக்கும் உலகத்துக்கும் தெரிந்தவை!

கேட்டாரே ஒரு கேள்வி

“This employee should go far என்று ஒருவரது performance appraisal-லில் குறிப்பிட்டால் அதற்கு என்ன பொருள்?”

*****************************************

“மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார். உச்சமான பதவிகளுக்குச் செல்லக் கூடியவர்” என்றுதான் அர்த்தம் வாசகரே.

இதைப் படித்தபோது guardian இதழில் முன்பு வெளியான சில வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. British Civil Service துறையில் பணியாற்றிய சில அதிகாரிகள் பற்றி அவர்களது மேலதிகாரிகள் எழுதிய குறிப்புகள் அவை. அந்தக் குறிப்புகள், எழுதியவரின் குறும்பையும் கற்பனை வளத்தையும் தெளிவாகவே காட்டுகின்றன.

This Officer should go for; and the sooner the better என்கிறது ஒரு குறிப்பு. இதை மொத்தமாகப் படிக்கும்போது இந்த அதிகாரிகளை விரைவிலேயே வெகு தொலைவுக்கு அனுப்புவதே நல்லது (அதாவது வேலை நீக்கம் செய்து விடுங்கள்) என்றாகிறது. இப்படிப்பட்ட பிற சுவையான குறிப்புகள் கீழே உள்ளன.

1. His men would follow him anywhere, but only out of curiosity.

2. He is technically sound but socially impossible.

3. Since my last report he has reached rock-bottom and has now started to dig.

4. The officer is tall and that is all!

5. He has carried out each and every one of his duties to his entire satisfaction.

6. He has wisdom of the youth and energy of old age.

*****************************************

“We had wonderful conversation என்கிறார்களே, அப்படி என்ன அதிசயமாக அவர்கள் பேசி இருப்பார்கள்?”

Seven wonders of the World என்ற பட்டியலை மனதில் வைத்துக்கொண்டு wonder என்றால் அதிசயம் என்று மட்டுமே நினைக்கக் கூடாது.

Wonderful என்பதை marvellous, outstanding, excellent போன்ற அர்த்தங்களிலும் நோக்கலாம்.

*****************************************

பள்ளியில் மானிட்டர் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. கணினியையும் மானிட்டர் என்று கூறுகிறார்களே, ஏன்?

தொடர்ந்து ஒன்றைக் கவனித்துப் பதிவுசெய்யும் கருவியை மானிட்டர் என்கிறோம். இதயத் துடிப்பை அளக்கும் கருவியை Heart monitor என்பதுண்டு.

*****************************************

எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்து கொள்ளும் நபரை அப்படி அழைப்பார்கள். அந்த அர்த்தத்தில்தான் Class monitor.

கணினியை மானிட்டர் என்பதில்லை. அதன் ஒரு பகுதியான திரையை மானிட்டர் என்பதுண்டு.

The rest is history என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்?

ஒருவரது வாழ்க்கை வரலாற்றில் சில குறிப்பிட்ட பகுதிகள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அப்படியொரு நூலில் தெரியாத விஷயங்களைக் குறிப்பிட்டு The rest is history என்றால் ‘மீதி விஷயங்கள் உங்களுக்கும், உலகத்துக்கும் தெரிந்தவை’ என்று பொருள்.

Adjunct என்றால் என்ன?

பொதுவான பொருளில் பார்க்கும்போது, adjunct என்பது ஒரு பொருளின் இணைப்பு. அந்தப் பொருளுக்கு அது அத்தியாவசியப் பகுதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

For many people investing in stock market is a profitable adjunct to supplement their otherwise fat income.

It is not a part of the essential life and it is merely a decorative adjunct.

ஆங்கில இலக்கணத்தைப் பொறுத்தவரை adverbs மற்றும் adverbial pharases ஆகியவற்றை adjuncts என்பார்கள். A lion roared loudly inside the forest. இந்த வாக்கியத்தில் loudly என்பது roared என்ற verb-ஐ விளக்குகிறது. எனவே அது adverb. Inside the forest என்பது adverbial phrase. Loudly, in the forest ஆகியவற்றை நீக்கிவிட்டால்கூட வாக்கியம் இலக்கணப்படி முழுமையானதாக இருக்கிறது.

ஆக loudly, in the forest ஆகியவை adjuncts.

*****************************************

Pace - Phase - Faze

Face என்றால் முகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Pace என்றால் எந்த வேகத்தில் ஒன்று நகர்கிறது என்பதைக் குறிக்கிறது. These changes are happening at a fast pace. We speeded up our pace.

Phase என்றால் ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. There are four phases in the life of a butterfly. We are entering a new phase since we married. She is going through a difficult phase.

Faze என்றால் ஒருவரை வியப்படைய அல்லது பதற்றமடையச் செய்வது. I am not fazed by his show of anger என்றால் அவன் கோபம் எனக்கு எந்தவிதப் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அர்த்தம். Nowadays no one is fazed by his anger.

கூடுதல் தகவல் - சிலர் nowaday, now-a-days என்றெல்லாம் எழுதுகிறார்கள். Nowadays என்பதே சரி.

*****************************************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The old man shows no sign of ___________ though he is 92 years old.

(a) Indolence

(b) Infirmity

(c) Old

(d) Childhood

(e) Health

இலக்கணப்படி old என்ற வார்த்தை அங்கு வராது.

92 வயதாகியும் அவர் குழந்தைப் பருவத்தை எட்டவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது. ஆக childhood என்பதும் தவறு.

92 வயதில் ஆரோக்கியம் குறையவே வாய்ப்பு அதிகம். எனவே, health என்ற வார்த்தை கோடிட்ட இடத்தில் பொருந்தவில்லை. Indolence என்றால் அது சோம்பலைக் குறிக்கிறது. இதுவும் பொருந்தவில்லை.

Infirmity என்பது பலவீனத்தைக் குறிக்கிறது.

92 வயதாகியும் அந்த முதியவர் பலவீனமடைந்ததற்கான எந்த அறிகுறிகளும் வெளிப்படவில்லை எனும்போது வாக்கியம் நிறைவாக இருக்கிறது.

The old man shows no sign of infirmity though he is 92 years old.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x