Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM
நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக உலகளாவிய அளவில் கட்டுமானத்துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பி.இ. சிவில் இன்ஜினீயர் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு உடனடியாக பணி கிடைத்தாலும் இதில் பட்டமேற்படிப்பு படிப்பதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளமுடியும்.
ஆழ்கடலில் சுரங்கம் அமைத்து ரயில் போக்குவரத்துக்கு கட்டுமான பணி மேற்கொள்வது முதல், தரமான ஆகாய விமான நிலையங்கள் அமைப்பது, பறக்கும் மேம்பாலம், ஆறுவழிச்சாலை, பெரிய ஷாப்பிங் மால், பலமாடி உயரக் கட்டிடங்கள் என கட்டுமானத் துறை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. பி.இ. மட்டும் படித்தால், சைட் இன்ஜினீயராக மட்டுமே பணி வாய்ப்பு பெற இயலும்.
பட்டமேற்படிப்பில் ஜியோடெக்னிக்கல் இன்ஜினீயரிங், ஹைட்ராலிக் அண்ட் வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினீயரிங், ஓசோன் இன்ஜினீயரிங் உள்ளிட்ட சிறப்பு பாடப் பிரிவுகள் உள்ளன. இதை படித்து முடிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கக் காத்திருக்கின்றன. ‘கேட்’ உள்ளிட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதன்மூலம் நல்ல கல்லூரிகளில், பட்டமேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்புக்கு குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதால் போட்டி மிகப்பெரிய அளவில் உள்ளது.
பில்டிங் டெக்னாலஜி கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்பை டெல்லி, கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பு மூலம் உயர்ந்த கட்டிடங்களை கட்டுவதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேரலாம். ஓசோன் இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகள் சென்னை ஐஐடியில் அளிக்கப்படுகிறது.
மலைப் பிரதேசங்களில் கட்டிடம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்யக்கூடிய சாயில் மெக்கானிக் பவுண்டேஷன் இன்ஜினீயர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இப்படிப்பு முடித்தவர்கள் சொற்ப அளவிலேயே உள்ளதால், இதற்கான தேவை அதிகம் உள்ளது.
பூமி அதிர்ச்சியால் கட்டிடங்கள் பிளவு படுதல், விரிசல் மற்றும் பழுதாவதை சீர்செய்யக்கூடிய எர்த் க்வேக் இன்ஜினீயரிங் பட்டமேற்படிப்பு உள்ளது. ரூர்கியில் உள்ள ஐஐடியில் எர்த் க்வேக் இன்ஜினீயரிங் மற்றும் ஸ்டக்சுரல் இன்ஜினீயரிங் அண்ட் டிசாஸ்டர் நேச்சுரல் மேனேஜ்மென்ட் படிப்புகள் உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபோஸ்டர் மேனேஜ்மென்ட், ரிமோட் சென்சிங், இரிகேஷன் வாட்டர் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.
கோவை, இந்தூர், புனே ஆகிய இடங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கன்ஸ்ட்ரக் ஷன் மேனேஜ்மென்ட் ரிசர்ச் மூலம் வழங்கும் பட்டமேற்படிப்புகள் 100 சதவீத பணி வாய்ப்பு வழங்கக்கூடியவையாக உள்ளது. கட்டுமான இடங்களில் நின்று பணியாற்றுவதைக் கடினமாக எண்ணும் பெண்கள், இதுபோன்ற சிறப்பு பட்டமேற்படிப்பு தேர்வு செய்து படிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT