Published : 29 Nov 2013 08:44 AM
Last Updated : 29 Nov 2013 08:44 AM
தேசிய திறனாய்வுத்தேர்வின் முதல்நிலைத்தேர்வு முடிவு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுக்கான தற்காலிக விடை (கீ ஆன்சர்) இன்று வெளியாகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வின் முதல்நிலைத்தேர்வு (மாநில அளவிலானது) கடந்த 24-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 261 மையங்கiளில் 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர்.
சென்னையில் 15 மையங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். பொதுவாக ஒரு தேர்வு முடிந்ததும் தற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், தேசிய திறனாய்வுத்தேர்வுக்கான கீ ஆன்சர் அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.tndge.in) வெள்ளிக்கிழமை வெளியிடப் படுகிறது.
முடிவு எப்போது?
தற்காலிக விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்த விளக்கங்களை தேர்வுத்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்தலாம். இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது.
விடைத்தாள்களை கணினி மூலம் ஸ்கேனிங் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தினசரி 15 ஆயிரம் வீதம் ஒரு வாரத்தில் அனைத்து விடைத்தாள்களையும் ஸ்கேனிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, விடைத்தாள்களை மதிப்பீடு செய்து தேர்வு முடிவினை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்வில் ஏறத்தாழ 300 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் தேசிய அளவிலான 2 ஆம் கட்ட இறுதித்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT