Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி

அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட வுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்ப தால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீ தத்தில் இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 ஆயிரம் காலியிடங்கள்

ஆனால், தகுதித்தேர்வு மூலமாக 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களையும் நிரப்ப அரசு திட்டமிட் டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணி யிடங்களுடன் ஒப்பிடும்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி கிடையாது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரையில் 14 ஆயிரம் காலியிடங்கள் என்றாலும், பாடவாரியான காலியிடங்கள் இன்னும் தெரியவில்லை.

பாடவாரியான காலியிடங் களும், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர் என்ற பட்டியல் தெரிந்த பின்னரே , வேலை உறுதியா? இல்லையா? என்பதை அறிய முடியும். ஒருசில பாடங்களில் காலியிடங்கள் இருக்கக்கூடும்,

ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான அளவு இருக்க மாட்டார்கள். அதேபோல், ஒருசில வற்றில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருப்பார் கள். காலியிடங்கள் குறைவாக இருக்கலாம். இந்த நிலையில், கட்- ஆஃப் மார்க் குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி இல்லை என கருதுவதால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று காலியிடங்கள் குறித்த விவரங்களையும் அறிந்த வண்ணம் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x