Published : 11 Jun 2019 12:50 PM
Last Updated : 11 Jun 2019 12:50 PM
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பச் சூழலைச் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்கள் மேற்கொண்டு படிக்க உதவித்தொகை அளிக்கவிருக்கிறது உஜ்வால் பவிஷ்யா உதவித்தொகை 2019-20.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 14-16 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2019-ல் 10-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருத்தல் அவசியம்.
விண்ணப்பதாரர் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான ஒளிப்படம், அடையாள அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களிடம் தொலைபேசி நேர்காணல் நடத்தப்பட்டு இறுதியாகத் தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோருக்குக் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30 ஜூன் 2019 முதல் கட்டத் தேர்வு முடிந்து தொலைபேசி நேர்காணல் நடத்தப்படும் நாள்: 12-31 ஜூலை 2019 முடிவுகள் வெளியாகும் நாள்: 10 ஆகஸ்ட் 2019 விண்ணப்பிக்க: http://www.b4s.in/vetrikodi/UBS9 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT