Published : 09 Apr 2019 01:01 PM
Last Updated : 09 Apr 2019 01:01 PM
கடந்த வாரம் வெளியான 'அந்த நாள்' - ‘பிற மதங்களை மதித்த மன்னன்’ கட்டுரை குறித்து, திருச்சியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் மருத்துவருமான இரா. கலைக்கோவன் பல கருத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தக் கட்டுரையில் தவறாக இடம்பெற்றிருந்த தகவல்கள், அவரது கடிதத்தின் அடிப்படையில் திருத்தி பிரசுரிக்கப்படுகிறது.
1. ராஜராஜனின் அண்ணன் ஆதித்தகரிகாலன் (ஆதித்ய அல்ல).
2. ராஜராஜனுக்குமுன் உத்தம சோழன் ஆட்சி புரிந்த காலம் 16 ஆண்டுகள். கும்பகோணம் நாகேசுவரர் கோயிலில் இது தொடர்பான கல்வெட்டு உள்ளது.
3. ராஜராஜ சோழனுக்கு மூன்று மகள்கள்: மாதேவடிகள், குந்தவை, கங்கமாதேவி (இரண்டு அல்ல). இது தொடர்பான கல்வெட்டு திருவையாறு வடகயிலாயம் கோயிலில் உள்ளது.
4. ராஜராஜனின் மகள் மாதேவடிகள் பௌத்த மதத்தைத் தழுவியவர் அல்ல. அதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை.
5. ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் ராஜராஜீசுவரம் (ராஜராஜேச்சரம் அல்ல).
6. ராஜராஜன் கால ஓவியங்கள் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை உள்சுற்றுவழியில் (மண்டபம் அல்ல) உள்ளன. இதற்கு சாந்தாரநாழி என்ற பெயரும் உண்டு.
7. பெரிய கோயில் முதன்மைக் கோபுரத்தில் 81 கரணங்கள் (நடன முத்திரைகள் அல்ல) வடிக்கப்பட்டுள்ளன. நடன முத்திரைகள் கைகளால் காட்டப்படுபவை. கரணங்களில் உடல் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது (‘போஸ்’). இந்தக் கரணச் சிற்பங்கள் கருவறையின் மேல்சுற்று வழியில் உள்ளன.
8. கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் இடம்பெற்றுள்ள முக்கியக் கதாபாத்திரங்களில் பல கற்பனையானவை.நந்தினி, ஆழ்வார்க்கடியான், சம்புவரையர், கந்தமாறன், மந்தாகினி, பூங்குழலி, சேந்தன் அமுதன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவை அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT