Published : 30 Apr 2019 11:47 AM
Last Updated : 30 Apr 2019 11:47 AM
வளர்ச்சி, ஆரோக்கியம், இனப்பெருக்கம், சமநிலை ஆகியவற்றுக்கு நாம் உண்ணும் உணவே ஆதாரம். சமச்சீரான அளவில் பல்வேறு சத்துகளைக் கொண்ட உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் நோய்களைத் தடுக்க முடியும்.
ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ சமச்சீரான உணவு அவசியம் என்ற விழிப்புணர்வு உலகம் முழுக்க உருவாகியுள்ள சூழலில், நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ் (ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், உணவுத் தொழில் முதல் உணவு ஆய்வு நிறுவனங்கள்வரை ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் படித்த நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஓர் ஊட்டச்சத்து நிபுணர் என்பவர் உணவுக்கு மனித உடல் எப்படி எதிர்வினையாற்றும் என்பதையும் மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் பாகங்களுக்கும் எந்தெந்தச் சத்துகள் தேவை என்பதையும் அறிந்துவைத்திருப்பவர்.
டயட்டீசியன் என்பவர் ஒரு குறிப்பிட்ட நோயுள்ளவர், வயதுடையவருக்கு அவரது உடல்நிலைக்கு ஏற்ற உணவையும் உணவின் அளவையும் முடிவு செய்வார். இதன் அடிப்படையில் நியூட்டிரிசியன், டயட்டீசியன்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள்
விவரம்:
உணவுப் பாதுகாப்பு மேம்பாட்டு விஞ்ஞானி: உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு, ருசி, ஊட்டச்சத்து ஆகியவற்றுடன் கூடிய புதிய உணவுப்பொருட்களைக் கண்டுபிடிப்பதும் ஏற்கெனவே தயாரித்து விற்பனை செய்யும் உணவுப்பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் பணி இவருடையது. இளங்கலை படித்தவர்கள் இந்தப் பணியில் சேரலாம்.
நியூட்ரிசியனல் தெரபிஸ்ட்: ஊட்டச்சத்துத் திட்டத்தையும் மனிதர்களின் வாழ்க்கை முறையையும் சேர்ந்து பரிசீலித்து ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கான திட்டத்தைத் தருபவரே நியூட்ரிசியனல் தெரபிஸ்ட். சிறப்பு மருத்துவ மனைகள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்றலாம்.
ஃபுட் லேபிளிங் ஸ்பெஷலிஸ்ட்: உணவுப்பொருட்கள் விற்கப்படும் டப்பாக்களில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிடும் பொறுப்பு இவருடையது. அந்த உணவுப்பொருளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமா என்பது போன்ற தகவல்களையும் இவரே அந்த லேபிள் வழியே தெரிவிப்பார்.
ஹியூமானிடேரியன் நியூட்ரிசியனிஸ்ட்: பஞ்சம், வறுமை நிலவும் மூன்றாம் உலக நாடுகள், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்குத் தேவைப்படும் உணவுகளை அந்தந்தப் பிராந்திய, கலாசார, ஆரோக்கிய நிலைகளுக்கேற்ப முடிவுசெய்வது ஹியூமானிடேரியன் நியூட்ரிசியனிஸ்டின் பணி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டிருந்தால் அவர்களுக்கான உணவை இவர்தான் முடிவு செய்வார்.
தகவல் தொழில்நுட்பமும் உலகமயமாதலும் நமது உணவுப் பண்பாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் உணவுப் பொருட்கள் பொதிபொதியாகக் கிடைக்கும் நிலையில் அவற்றின் ஆரோக்கியம், தரநிர்ணயம் சார்ந்தும், அரசுத் துறைகளில் வேலைகள் ஊட்டச்சத்து, உணவூட்டவியல் நிபுணர்களுக்கான தேவையும் பெருகியுள்ளன.
நியூட்டிரிசியன் டயட்டீசியன் தொடர்பான படிப்புகள் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மூலம் வழங்கப்படுகின்றன. உணவு, ஊட்டச்சத்து, உணவூட்டவியல் சார்ந்து பட்டய படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள்வரை இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.துறை முகம்தமிழகத்தில்
தமிழகத்தில் எங்கே படிக்கலாம்? பி.எஸ்சி (நியூட்டிரிசியன் & டயடெடிக்ஸ்) எம்.எஸ்சி, எம்.பில் (ஃபுட் சயன்ஸ் & நியூட்ரிசியன்) ஆகிய படிப்புகள் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் பெண்கள் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT