Last Updated : 05 Feb, 2019 11:15 AM

 

Published : 05 Feb 2019 11:15 AM
Last Updated : 05 Feb 2019 11:15 AM

ஆங்கில​ம் அறிவோமே 250: ஒருமையில் சொன்னால் வேறு அர்த்தம்!

கேட்டாரே ஒரு கேள்வி

“ஆண்கள் அணிவது Pant-ஆ Pants-ஆ?”

“Alexandar Dumas எழுதிய பிரபலப் புதினம் Three Musketeers என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  Musketeer என்றால் யார் அல்லது எது?”

Musket அணிந்த ராணுவ வீரர்.  Musket என்பது ஒல்லியாகவும், நீளமாகவும் இருக்கும் ஒருவகைத் துப்பாக்கி.

Scissors, Forceps போலவே pants என்பதும் இரு பகுதியை இணைக்கும் ஒரு பகுதிதான்.  எனவே, pants என்பதுதான் பொருத்தமான சொல்லாக இருக்கும்.  உடைகளைப் பொறுத்தவரை bellbottoms, jodphurs என்று பன்மையில் அழைக்கப்படும் பல உடைகள் உண்டு.  Pyjamas, Panties, Thermals போன்றவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சில நேரம் பன்மைச் சொற்களுக்கான ஒருமை வடிவம் இருந்தாலும் அவை இரண்டும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுப்பதாக இருக்கும்.  எடுத்துக்காட்டாக glass, glasses என்பதைப் பார்ப்போம்.  Glass என்றால் கண்ணாடி, glasses என்றால் மூக்குக் கண்ணாடி.

Pant என்பது verb ஆகவும் பயன்படுவதுண்டு.  Pant என்றால் மூச்சிரைப்பது என்று ஒரு அர்த்தம் உண்டு.  After running a kilometer, he panted என்று கூறலாம்.

english-2jpg100 

“‘Five finger discount’ என்று சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஒரு கனவான் தன் நண்பரிடம் குறிப்பிட்டார்.  அப்போது வேடிக்கையாகக் கண் அடித்தார்.  அப்போதிலிருந்தே இந்தத் தள்ளுபடியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் வந்துவிட்டது.  என்னிடம் உள்ள அகராதிகளில் இதற்கான பொருள் இல்லை. தெளிவுபடுத்துங்கள்”.

இது தள்ளுபடி கிடையாது.  ஒருவேளை நீங்கள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தபோது யாராவது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பொருளைச் சத்தமில்லாமல் எடுத்துத் தன் பையில் போட்டுக்கொண்டிருக்கலாம்.  பொதுவாக இதுபோன்ற திருட்டுகளை shoplifting என்பார்கள்.

“Five finger discount” என்பது shoplifting-ஐத்தான் குறிக்கிறது.

இதைப் பணத்துக்காக கிரிமினல்கள்தான் செய்வார்கள் என்பதில்லை.  பெரும் பணக்காரராக இருந்தாலும்கூடச் சிலருக்கு இதுபோன்ற கடைகளுக்குச் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு பொருளைத் திருடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழும்.  இதுபோன்ற மனநிலையை kleptomania என்பார்கள். கிரேக்க மொழியில் kleptos என்றால் திருடுதல்.  Mania என்றால் மனநலப் பிறழ்வு.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x