Published : 19 Feb 2019 10:44 AM
Last Updated : 19 Feb 2019 10:44 AM
கேட்டாரே ஒரு கேள்வி
“Nonchalant என்று ஒரு சொல் உள்ளதே அதற்கு எதிர்ச்சொல் chalant என்பதா?”
Chalant என்று ஒரு சொல் இல்லை. Nonchalant என்றால் கூலாக இருப்பது என்று பொருள். அதாவது composed. ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்றாலோ அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலோ நீங்கள் nonchalant ஆக நடந்துகொள்வீர்கள். ஒரு விஷயத்தில் உங்கள் கருத்து கேட்கப்படும்போது உங்கள் இரண்டு தோள்களையும் கொஞ்சம் மேலே ஏற்றிக் கீழே இறக்கினால் ‘எனக்கு இதில் எந்தக் கருத்தும் இல்லை’ என்பதைத் தெரிவிக்கிறீர்கள். அதாவது it is a nonchalant shrug.
***********
“Escalator என்றாலும், elevator என்றாலும் ஒன்றுதானே?” என்று கேட்டிருக்கிறார் நண்பர் ஒருவர்.
Elevator என்பதை நாம் பொதுவாக லிஃப்ட் என்று குறிப்பிடுகிறோம். தமிழில் மின்தூக்கி.
Escalator என்பது நகரும் படிக்கட்டுகளைக் கொண்டது. படிகள் தொடர்ந்து ஏறிக்கொண்டோ இறங்கிக்கொண்டோ இருக்க, நாம் அதில் செல்வோம். Escalator என்பதை நகரும் படி எனலாம்.
“Peter Piper Picked a Peck of Pickled Peppers” என்பது போன்ற வாக்கியங்களை எப்படிக் குறிப்பிடலாம்?
இந்த வாக்கியத்தை வேகமாகப் பலமுறை கூற வேண்டும் என்று சவால்விட்டால் பீட்டர் உட்பட யாருக்குமே அது சிக்கல்தான். எனவே, இவற்றை tongue twisters என்கிறார்கள்.
ஆனால், இதை alliteration என்று இலக்கியத்தனமாகவும் கூறலாம். இது ஒரு வகைப் பேச்சு நடை. அடுத்தடுத்த சொற்களின் முதல் எழுத்தோ அடுத்த எழுத்தோ ஒன்றாகவே இருப்பது.
She sells sea-shells by the sea-shore என்பது மற்றொரு எடுத்துக்காட்டு.
Alliteration என்பது ஒரு முழு வாக்கியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.
***********
Gastric என்றால் வாயு தொடர்பானது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாயுப்பிடிப்பை ‘எனக்கு gastric trouble’ என்று விவரிப்பவர்கள் உண்டு.
உண்மையில் gastric என்பதற்கும், கேஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை Gastric என்றால் வயிறு தொடர்பான என்று பொருள். கிரேக்க மொழியில் gaster என்பதற்குப் பொருள் வயிறு என்பதாகும்.
Gastric juices என்றால் செரிமானத்துக்காக வயிற்றில் சுரக்கும் அமிலங்கள்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT