Published : 08 Jan 2019 10:45 AM
Last Updated : 08 Jan 2019 10:45 AM
கேட்டாரே ஒரு கேள்வி
நல்லவராக இருந்து கொண்டு கெட்டவன்போல நடந்துகொள்பவரையும் Hypocrite என்று கூறலாமா?
****************
“தொலைபேசியில் பயன்படுத்தப்படும் ஹலோ என்ற வார்த்தையை Hallo, Hello என்று இருவிதமாகவும் பயன்படுத்தலாமா?”
கூடாது நண்பரே. Helloதான் சரி. Hallo என்று ஒரு வார்த்தை கிடையாது. Halo என்றால் ஒளிவட்டம். புனிதர்களின் தலையைச் சுற்றி Halo இருப்பதாக ஓவியம் வரைவார்கள்.
Hollow என்றால் காலியான என்று பொருள். உள்ளீடற்ற என்பது மேலும் பொருத்தம். Hollow victory, அது ஏதோ பேருக்குதான் வெற்றி என்று பொருள். அதாவது அதனால் எந்தப் பயனும் இல்லை. மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெறுவதையும் இப்படிக் குறிக்கலாம். (Landslide victory என்பது மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது).
****************
“I have been better என்றால் ‘இப்போது இருப்பதைவிட முன்பு நன்றாக இருந்தேன்’ என்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்டீர்கள். Have been என்பது present perfect தானே. Past tense எப்படி வரும்?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். நியாயம்தான். ஆனால் சில பேச்சு வழக்குகளில் இலக்கணம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மற்றொரு எடுத்துக்காட்டு ‘Long time no see’.
“A command of English என்பதுதானே சரி? A command over English என்று குறிப்பிடலாமா?” என்ற வேறொரு வாசகரின் கேள்விக்கும் இதேபோன்ற பதிலைத்தான் அளிக்க வேண்டி இருக்கிறது. Command of English என்பதுதான் சரி. ஆனால், command over English என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
****************
“தமிழில் ‘தோல்வியே வெற்றியின் முதல்படி’ என்று சமாதானப் படுத்திக்கொள் கிறோம் அல்லது உற்சாகப்படுத்திக் கொள்கிறோம். இப்படி ஆங்கிலத்தில் ஏதேனும் வசனங்கள் உண்டா? எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
Winners need their losers/
I am playing my own game/
My time will come/
The meek shall inherit the earth/
The brick rejected becomes the chief corner stone.
****************
No two ways about it என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். வேறு வழியில்லை என்பதைத்தான் அது குறிக்கிறது. அதாவது no choice.
****************
Hypocrite என்பவர் இரட்டைவேடம் போடுபவர். அந்தக் காலத்து நாடக மொழியில் சொல்வதானால் கபடவேடதாரி. எடுத்துக்காட்டாகச் சுற்றுச்சூழல் குறித்து அடிக்கடி பேசிக்கொண்டு நச்சுப்புகையை வெளியிடும் பிரம்மாண்ட காரில் செல்பவரை Hypocrite எனலாம்.
ஆனால், கேட்டாரே ஒரு கேள்வியில் குறிப்பிட்டதுபோல உள்ளுக்குள் உத்தமனாகவும், வெளியில் வஞ்சகனாகவும் இருப்பவரை Hypocrite என்று கூறுவதில்லை. கிரீஸ் நாட்டில் அந்தக் கால நாடகங்களில் தான் ஏற்றுக்கொள்ளாத கருத்துகளை மேடையில் உணர்ச்சி பொங்கப் பேசும் நடிகரை Hupocrites என்பார்கள். அதிலிருந்துதான் Hypocrite என்ற வார்த்தை உருவானது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT