Last Updated : 18 Dec, 2018 10:51 AM

 

Published : 18 Dec 2018 10:51 AM
Last Updated : 18 Dec 2018 10:51 AM

ஆங்கில​ம் அறிவோமே 244: பழையன கழியாமல், புதியன புகாதே!

கேட்டாரே ஒரு கேள்வி

Back என்றால் பின்னால். Log என்றால் விறகு. அப்படியானால் வீட்டின் பின்புறம் வைக்கப்படும் விறகுதான் backlog எனலாமா?

**********

ஸ்டேடியம் என்பதற்கும், விளையாட்டு மைதானம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா?

ஸ்டேடியம் என்பதில் பார்வையாளர்கள் உட்கார்ந்து போட்டிகளைக் காண்பதற்கான இருக்கைகள் இருக்கும். பெரும்பாலும் பார்வையாளர்களின் பகுதிக்கு மேற்கூரை இருக்கும்.

**********

Backlog என்பது 1680-களில் உருவான சொல். அமெரிக்காவில், வீடுகளில் தீக்கணப்புக்குப் பின்புற முள்ள இடத்தில்தான் விறகுகளை அதிக அளவில் வைப்பார்கள். இந்த இடத்தை backlog என்று கூற ஆரம்பித்தார்கள். (கணப்புக்கு முன்புறம் ஓரிரு விறகுகள்தாம் இருக்கும்).

காலப்போக்கில் தேங்கிக் கிடக்கும் வேலைகளை எல்லாம் backlog என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள். “நிறைய backlog. எனவே, overtime செய்யும்படி ஆயிடுச்சு”, “ஒரு வாரம் லீவு போட்டுட்டேன். நிறைய வேலை backlog ஆகியிருக்கும்”.

**********

“Nice to meeting you என்பது சரியா, nice meeting you என்பது சரியா?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

 Nice to meeting you என்பது தவறு. Nice meeting you என்பதுதான் சரி. Nice to meet you என்பதும் தவறு அல்ல.

 pleased to meet you, glad to meet you, it is a pleasure meeting you போன்ற வாக்கியங்களையும் பயன்படுத்தலாம்.

english-2jpg100 

ஹோட்டல்களில் படுக்கை விரிப்புகளை மாற்றுவதை ‘Changing Bed linen’ என்கிறார்களே. Linen துணியை இதற்குப் பயன்படுத்துவதில்லையே!

வாசகரே, உண்மைதான். இந்தக் காலத்தில் பருத்தியாலான படுக்கை விரிப்புகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். என்றாலும், பழக்கத் தோஷத்தில் அதையே பயன்படுத்துகிறோம்.

இப்படி ‘பழையன கழியாமல், புதியன புகாமல்’ இருக்கும் வேறு சில சொற்றொடர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

கணினியில்கூட we ‘type’ a letter! செல்போனில்கூட we ‘dial’ a number! அதேபோல செல்போனை we are ‘hanging up’!

**********

 “மிக அதிகமாக மழை பெய்வதை it is raining cats and dogs என்பார்கள். வேறு எப்படிக் குறிப்பிடலாம்?’’ என்பது வாசகர் ஒருவரின் கேள்வி.

It is lashing down

It is bucketing down

It is pelting down

It is raining stair rods

**********

Skin alive என்பதற்குப் பொருள் என்ன?

மிகக் கோபமாக இருப்பது. தோலை உரிக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு எந்த அளவுக்குக் கோபம் இருக்க வேண்டும்! If I do not reach my home on time my parents will skin me alive.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x