Published : 10 Jul 2018 10:27 AM
Last Updated : 10 Jul 2018 10:27 AM
1.
இதுவரை 20 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெறுவது 21-வது கோப்பை. ஒரு முறைக்கு மேல் கோப்பை வென்ற அணிகள் உருகுவே, அர்ஜென்டினா, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில். உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது?
2.
உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பிரேசிலின் பீலே, ரொனால்டோ போன்றோர் முன்னணியில் இருந்தாலும், அதிக கோல் அடித்த சாதனையைச் செய்தவர் யார்?
உலகக் கோப்பைப் போட்டிகளில் ஜெர்மனி, பிரேசில் அணிகளைத் தாண்டி இரண்டு அணி வீரர்கள் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளனர். அவர்கள் ஃபிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் (13 கோல்), ஹங்கேரியின் சாண்டார் கோசிக்ஸ் (11 கோல்). இருவருடைய கோல்களின் சிறப்பு என்ன?
4.
உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகப் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த சாதனையைப் புரிந்தவர் யார்? ஃபிஃபா உலகக் கோப்பைக் கனவு அணிக்கு அதிக ஓட்டு வாங்கியவரும் இவரே.
5.
உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணி எது?
6.
உலகக் கோப்பைப் போட்டிகளில் வீரர்கள் ஒருவரை மற்றொருவர் கீழே தள்ளிவிடுவது, ஆட முடியாமல் இடையூறு செய்வது போன்ற ‘ஃபவுல்’களில் ஈடுபடுவது சாதாரணம்தான். குறிப்பாக, நட்சத்திர வீரர்களை கோல் அடிக்க விடாமலும் உளவியல்ரீதியிலும் மற்ற அணி வீரர்கள் தாக்குவது நடக்கிறது. இதில் மிகவும் மோசமானதாகக் கருதப்படும் சம்பவம் எது?
7.
உலகக் கோப்பையை அதிக முறை பிரேசில் வென்றிருந்தாலும் இறுதிப் போட்டியில் அதிக முறை விளையாடிய அணி எது?
கடந்த உலகக் கோப்பை அரைஇறுதிப் போட்டி பல்வேறு வகைகளில் சிறப்பு பெற்றது. அந்தப் போட்டியில் வென்றதன் மூலமாகவே இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி எட்டாவது முறையாகத் தகுதி பெற்றது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளிலேயே மிகப் பெரிய வெற்றியாக அது அமைந்தது. மிகக் குறைந்த நேரத்தில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டியும் அதுவே: 6 நிமிடங்களில் 4 கோல்கள். அந்தப் போட்டியில் பிரேசிலுக்கு எதிராக ஜெர்மனி அடித்த கோல்கள் எத்தனை?
9.
1998-ல் கோப்பை வென்ற பிரான்ஸ், 2006-ல் கோப்பை வென்ற இத்தாலி, 2010-ல் கோப்பை வென்ற ஸ்பெயின், 2014-ல் கோப்பை வென்ற ஜெர்மனி. இந்த நான்கு அணிகளும் கோப்பையை வென்றதைத் தாண்டி வேறோர் ஒற்றுமையையும் கொண்டுள்ளன. அது என்ன?
10.
‘கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர்’ என்ற சிறப்பை பிரேசிலின் பீலேவுக்கு ஃபிஃபா வழங்கியது. அதே நேரம் அர்ஜென்டினாவின் மரடோனா பெற்ற சிறப்பு என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT