Published : 19 Dec 2024 06:22 AM
Last Updated : 19 Dec 2024 06:22 AM
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள், தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்கள் மூலம் வைணவத்தை தழைக்கச் செய்தார். பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படும் இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து, இறைவன் மீது கொண்ட பக்தியால், அவருடனேயே இரண்டறக் கலந்தார். 108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், 99-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள் மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுரைக்கு அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில், 7-ம் நூற்றாண்டில் விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்ற வைணவப் பெரியவர் வாழ்ந்து வந்தார். நந்தவனம் அமைத்து, அதில் பூக்கும் பூக்களைப் பறித்து, மாலையாகக் கோர்த்து, வடபத்ர சாயி பெருமாளுக்கு அணிவிக்கும் சேவையை (திருத்துழாய் / துளசி கைங்கர்யம்) செய்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT