Published : 14 Dec 2024 06:09 AM
Last Updated : 14 Dec 2024 06:09 AM

ப்ரீமியம்
மீன்திட்டின் வளத்தை இழக்கப் போகிறோமா? | கூடு திரும்புதல் 26

சிறு படகுகள் சுறாப்பாருக்கு வர இயலாது என்று அமிர்தலிங்கம், டி சில்வா போன்ற இலங்கை மீன்வள ஆய்வாளர்கள் எழுதிய காலத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் மீனவர்கள் எவ்விதமான நவீன வழிகாட்டு நுட்பங்களின் துணையும் இல்லாமல், வள்ளங்களிலும் (நாட்டுப் படகு) கட்டுமரங்களிலும் பாய்விரித்துத் தங்குகடல் பயணம் மேற்கொண்டு, தூண்டில் நீட்டி மீன்பிடித்து வந்துள்ளனர். அப்பகுதி மேலே குறிப்பிட்ட பாறைகள் மிகுந்துள்ள சுறாப்பாரின் வட விளிம்பாக இருந்திருக்க வேண்டும்.

இருள் மண்டிய பேராழப் பகுதிகளை வேணாட்டு மீனவர்கள் கசம் என்கிறார்கள். கசத்தைக் கடந்து, ஆழம் குறைந்த பகுதியான இம்மீன்திட்டின் குறிப்பிட்ட இடங்களைச் செம்மீன் (Red snapper) கெட்டு, கலவாக் (Rock cod) கெட்டு, சண்டாளக் கெட்டு என்பதாக அடையாளம் கண்டுள்ளனர். சமைத்த உணவும், முதல் நாள் அறுவடையைப் பத்திரப்படுத்துவதற்கான கல் உப்பும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கட்டுமரத்தில் இருவழிப் பயணம் ஏறத்தாழ இரண்டு நாள் எடுக்கும்.

இந்த அபாரமான மீன்வேட்டத் திறனும் துணிவும்தான் விசைப்படகுகளில் இன்றைக்கு அவர்களை 1,000, 1,500 கடல் மைல் பயணிக்க வைக்கிறது. சிவலிங்கம் போன்ற ஆய்வாளர்கள் தென் திருவிதாங்கூர் மீனவர்களைக் குறித்து அறிய நேர்ந்திருந்தால், சுறாப்பார் மீன்வளம் குறித்த மேம்பட்ட புரிதல் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x