Published : 07 Dec 2024 06:11 AM
Last Updated : 07 Dec 2024 06:11 AM
கடலலைகளின் அசைவோடு காலை நேரக் காற்றில் நெற்கதிர்கள் தாழ்ந்து நிமிர்கின்றன. ஓர் ஆசிரமத்தின் அமைதியோடு அந்தப் பண்ணை நம்மை வரவேற்கிறது. இடம் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள சுக்கன்கொல்லை. இங்கு 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் ‘இந்தியப் பாரம்பரிய அறிவியல் மைய’த்தின் (CIKS - Centre for Indian Knowledge Systems) ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இயற்கைவழி வேளாண்மையில் கால் பதிக்கும் ஒருவர், கற்பதற்கும் விளை பொருள்களை விற்பதற்கும் நிறுவனம் சார்ந்த வழிகாட்டுதல் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இந்த அடிப்படையான சிக்கல்களைக் கருத்தில்கொண்டு 1995லிருந்து இம்மையம் செயல்பட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT