Published : 29 Nov 2024 06:33 AM
Last Updated : 29 Nov 2024 06:33 AM

ப்ரீமியம்
அன்னமிட்ட கை | ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு, பிறந்தநாள் சிறப்பு

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்பட்ட வைக்கத்தில் 1923, நவம்பர் 30ஆம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி ஜானகி என்கிற வி.என்.ஜானகி. அவரின் தந்தையான ராஜகோபால், தற்போதைய நாகை மாவட்டம் போகலூரைச் சேர்ந்தவர். தமிழாசிரியரான இவர், திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார். இவருடன் பிறந்த சகோதரர்தான் திரைப்படப் பாடல்களுக்குப் பேர் போனவரான பாபநாசம் சிவன். கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஜானகி அம்மா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், மராட்டியம் என்று பல மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

பரதம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்று தென்னகம் முழுவதும் மேடை நிகழ்ச்சிகளில் வலம் வந்தார். சிலம்பம், கத்திச் சண்டை போன்ற தற்காப்புக் கலைகளையும் கற்றவர். தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியம் உரு வாக்கிய ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளியில் முறையான நடனம் கற்றுக் கொண்டவர். கே.சுப்ரமணியம்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x