Last Updated : 28 Nov, 2024 06:33 AM

 

Published : 28 Nov 2024 06:33 AM
Last Updated : 28 Nov 2024 06:33 AM

ப்ரீமியம்
குமரனை கொண்டாடிய குழந்தைகள்!

தேவர்களையும் முனிவர்களையும் பூவுலகில் அனைத்து உயிர்களையும் துயரடைய வைக்கிறான் சூரபத்மன். அவனுடைய தம்பிகளுடன் சேர்ந்து, தேவேந்திரனையும் தோற்கடித்து, தேவலோகத்தையும் கைப்பற்றுகிறான். தேவர்களை, அசுரர்களின் ஏவல் அடிமைகளாக்குகிறான். அவனுடைய தவ வலிமையால் பிரம்மதேவர், மகாவிஷ்ணுவாலும் எதுவும் செய்யமுடியாத நிலை. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானோ தவத்தில் மூழ்கியிருக்கிறார். சங்கரனும் சங்கரியும் சேர வேண்டும். அதற்கு சிவபெருமானின் தவம் கலைய வேண்டும். இந்தப் பின்னணியில் தொடங்குகிறது ஷடாக்ஷரம் நாட்டிய நாடகம்.

மன்மதனின் உதவியால் மகேஸ்வரன் மகேஸ்வரி திருமணம் நடக்கிறது. ஆறுமுகனின் பிறப்பு, அவதார நோக்கம், அவரின் திருவிளையாடல்கள் என நாட்டிய நாடகம் பார்க்க வந்த ரசிகர்களை குளிரூட்டப்பட்ட பேருந்தில் உட்காரவைத்து, பழநி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலைக்கு பக்தி சுற்றுலா அழைத்துச் சென்ற அனுபவத்தை அளித்தது ஷடாக் ஷரம் நாட்டிய நாடகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x